உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான இடமாற்றம் தொடர்பில் கேள்வி எழுப்பிய ரவிகரன் எம்.பி.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
34 பார்வைகள்

பதிலீடு இன்றிய நிலையில் நெடுங்காலமாக வெளிமாவட்டங்களில் பணிபுரியும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான இடமாற்றம் தொடர்பில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், பொது நிர்வாக, மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்நிலையில் அந்த இடமாற்றத்தைச் செய்வதற்கு எவ்விதமான தடைகளும் இல்லை எனப் பதிலளித்த பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன, ஒரே இடத்தில் ஐந்து வருட சேவைக்காலத்திற்கும் மேலாக சேவையாற்றும் உத்தியோகத்தர்கள் தொடர்பான எதிர்கால இடமாற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமெனவும் தெரிவித்தார்.

நாடாளுமன்றில் 08.07.2026 இன்று இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினா நேரத்திலேயே இவ்விடயம் தொடர்பில் பேசப்பட்டுள்றது.

இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

கௌரவ அமைச்சர் அவர்களே
பதிலீடு இன்றிய நிலையில் நெடுங்காலம் வெளிமாவட்டங்களில் பணிபுரியும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான தீர்வு தொடர்பானது.

பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சால் கடந்த 2025.07.21 அன்று வெளியிடப்பட்ட இணைந்த சேவைகள் சுற்றறிக்கை 02/2025 இல் இணைந்த சேவையிலுள்ள அலுவலர்களுக்கான வருடாந்த இடமாற்றக் கொள்கையில், 2.2.2 மற்றும் 2.2.3 பகுதியில்
5 வருட சேவைக்காலத்தை ஒரு சேவை நிலையத்தில் நிறைவுறுத்திய அலுவலர்கள் இடமாற்றப்பட வேண்டும் எனக் குறிப்பிடுகிறது.

அவ்வாறு தகுதியுள்ள ஒருவர் வேறொரு சேவை நிலையத்துக்கு இடமாற்றத்தைக் கோரும் போது, அக்கோரிக்கையை நிறைவேற்றுவதற்காக அதிகூடிய சேவைக்காலமாக பணியாற்றும் அலுவலர்களை வெளியிடங்களுக்கு இடமாற்றலாம் என்று குறித்த இடமாற்றக் கொள்கையின் பகுதி 2.4 குறிப்பிடுகிறது.

2026ஆம் ஆண்டுக்குரிய இடமாற்றத்தில் வடமாகாணத்தில் யாழ்ப்பாணம் தவிர்ந்த ஏனைய 4 மாவட்டங்களிலும் பொதுநிர்வாக அமைச்சின் கீழ் இணைக்கப்பட்டு மாவட்டச் செயலகங்களிலும் பிரதேச செயலகங்களிலும் பணிபுரியும் 136 அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் இடமாற்றத்துக்கு விண்ணப்பித்துள்ள போதும் அவர்களுக்கான இடமாற்றங்கள் இதுவரை வழங்கப்படவில்லை என அறியமுடிகிறது.

கிட்டத்தட்ட 1000 அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு மேல் யாழ்ப்பாணத்தில் மிகையாக பணிபுரிவதாக கூறப்படுகிறது. மறுபுறம் 5 ஆண்டுகள் தாண்டிய சேவைக்காலத்தை வெளிமாவட்டங்களில் நிறைவுறுத்தியும் அவர்கள் இடமாற்றம் பெற வழியில்லாமல் அல்லல்படுகின்றார்கள். இந்த ஓரவஞ்சனை ஏன்?

உங்களால் வெளியிடப்பட்ட இடமாற்றக் கொள்கையை இறுக்கமாக நடைமுறைப்படுத்தி இப்படியான அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு பதிலீட்டுடனான இடமாற்றத்தை வழங்குவதற்கு இன்னும் எத்தனை மாத காலம், ஆண்டுகாலம் அவர்கள் வெளிமாவட்டங்களில் ஏக்கத்தோடு பணிபுரிய வேண்டும்? என நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் கேள்வி எழுப்பினார்.

இந்நிலையில் பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன இதன்போது பதிலளிக்கையில்,

நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் அவர்களால் முன்வைக்கப்பட்ட விடயங்கள் தொடர்பாகத் தேடிப் பார்க்க முடியும்.

தற்போது வருடாந்த இடமாற்றங்களின் போது எவ்விதமான பிரச்சினைகளும் எழுவதில்லை. எங்களுடைய அறிக்கையின்படி அவ்வாறுதான் உள்ளது.

கடந்த 2025.07.21ஆம் திகதி வெளியிடப்பட்ட இணைந்த சேவைகள் சுற்றறிக்கை 02/2025இன் பிரகாரம் பெறப்பட்ட தகவல்களின்படி, இடமாற்றம் வழங்கக்கூடிய உத்தியோகத்தர்களுக்கு 2025ஆம் ஆண்டிற்கான வருடாந்த இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளது.

அத்தோடு நாடாளுமன்ற உறுப்பினர் கூறியதைப் போல இந்த விடயத்தில் ஏதாவது பிரச்சினைகள் இருப்பின் 2026ஆம் ஆண்டிற்கான வருடாந்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டதன் பின்னர் ஒரே இடத்தில் ஐந்து வருட சேவைக்காலத்திற்கும் மேலாக சேவையாற்றும் உத்தியோகத்தர்கள் தொடர்பான எதிர்கால இடமாற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்.

வடமாகாணத்தின் எல்லா மாவட்டங்களிலும் மேலதிக எண்ணிக்கையில் இருக்கின்றனர்.

அந்தவகையில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 852 மேலதிக எண்ணிக்கை காணப்படுகின்றது, கிளிநொச்சி மாவட்டத்தில் 174 பேர் மேலதிகமாக பணியாற்றுகின்றனர், மன்னார் மாவட்டத்தில் 59 பேர் மேலதிகமாகப் பணியாற்றுகின்றனர், முல்லைத்தீவு மாவட்டத்தில் 90 பேர் மேலதிகமாக உள்ளனர், வவுனியா மாவட்டத்தில் 54 பேர் மேலதிகமாக உள்ளனர்.

அந்த இடமாற்றத்தைச் செய்வதற்கு எவ்விதமான தடைகளும் இல்லை. எனவே அது தொடர்பில் தேடிப்பார்த்து இடமாற்றத்தை எம்மால் செய்ய முடியும் – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நீதித்துறை, பொருளாதாரம் தொடர்பில் பேச ராஜபக்ஷக்களுக்குத் தார்மீக உரிமை இல்லை.!

அரசு சிறந்த பல திட்டங்களை முன்னெடுக்கும் போது ஊழல்வாதிகள் அனைவரும் அதற்கு எதிராக ஒன்றிணைந்துள்ளனர் என்று தெரிவித்த தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க, நீதித்துறை சுதந்திரம்…

48 0 0
இலங்கை செய்திகள்

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் செம்மணி விவகாரம் தொடர்பில் அழுத்தம் பிரயோகிக்க வேண்டும்.!

செம்மணி மனிதப் புதைகுழி குறித்துச் சுயாதீன விசாரணைகள் நடத்தப்படுவதை உறுதி செய்வதை இலக்காகக் கொண்டு இலங்கை அரசுடன் பேச்சுகளில் ஈடுபடுவதுடன், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில்…

47 0 0
இலங்கை செய்திகள்

கோர விபத்து; பெண் உட்பட இருவர் உயிரிழப்பு.!

காலி, அம்பலன்வத்தை, அனகாரிக தர்மபால மாவத்தையில் நேற்று வியாழக்கிழமை முற்பகல் இடம்பெற்ற உந்துருளி மற்றும் முச்சக்கரவண்டி விபத்தில் பெண் ஒருவரும் ஆண் ஒருவரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அம்பலன்வத்தையிலிருந்து…

28 0 0
இலங்கை செய்திகள்

குருக்கள்மடம் ஸ்ரீலஸ்ரீ செல்லக்கதிர்காம ஆலய தேர்த் திருவிழா.!

கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு, குருக்கள்மடம் அருள்மிகு ஸ்ரீலஸ்ரீ செல்லக்கதிர்காம ஆலயத்தின் சித்திரத் தேர்த் திருவிழா நேற்று ஆயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ சிறப்பாக நடைபெற்றது. மட்டக்களப்பு மாவட்டத்தில்…

33 0 0