உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

நீர்கொழும்பு சிறைச்சாலை வன்முறை; உயிரிழந்த அதிகாரிகளுக்கு சிறைச்சாலைகள் திணைக்களம் அஞ்சலி.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
28 பார்வைகள்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட பயங்கர வன்முறையின் போது, தங்களது கடமையைச் செய்ய முற்பட்டு மரணமடைந்த ஏழு சிறைச்சாலை அதிகாரிகளுக்கும் இலங்கை சிறைச்சாலைகள் திணைக்களம் தனது நெஞ்சார்ந்த அஞ்சலியைச் செலுத்தியுள்ளது.

இது தொடர்பாக சிறைச்சாலைகள் திணைக்களம் விடுத்துள்ள உத்தியோகபூர்வ அறிக்கையில், உயிரிழந்த அதிகாரிகள் அனைவரும் “தங்களது கடமையை நிறைவேற்றுவதற்காகத் தங்களின் உயிர்களையே தியாகம் செய்த உண்மையான வீரர்கள்” எனப் புகழாரம் சூட்டியுள்ளது.

அத்துடன், சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் மற்றும் திணைக்களத்தின் ஒட்டுமொத்தப் பணியாளர்கள் சார்பாக, உயிரிழந்த அதிகாரிகளின் குடும்பத்தினருக்குத் தங்களது ஆழ்ந்த இரங்கலையும் சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துக் கொண்டுள்ளது.

நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட பயங்கர மோதலின் போது கடமையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போதே இந்த அதிகாரிகள் கைதிகளின் கொடூரமான தாக்குதலில் கொல்லப்பட்டனர்.

இவ்வாறு மரணமடைந்த அதிகாரிகளின் விவரம் வருமாறு,

  • ஜெயிலர் எஸ்.எச்.ஜி. சந்திரவம்ச
  • ஜெயிலர் சாஜன்ட் ஆர்.பி.ஆர். சஞ்சீவ
  • ஜெயிலர் சாஜன்ட் பி.என்.என். தரங்க
  • ஜெயிலர் சாஜன்ட் டி.என்.ஆர். திலகசிறி
  • ஜெயிலர் சாஜன்ட் டி.டபிள்யூ. புஷ்பகுமார
  • ஜெயிலர் சாஜன்ட் எஸ்.டி.எஸ். அபேவர்தன
  • ஜெயிலர் சாஜன்ட் ஏ.டி. தரங்க

நாட்டின் சிறைச்சாலை வரலாற்றில் கடமையின் போது ஒரே தருணத்தில் இத்தனை அதிகாரிகள் உயிரிழந்தமையானது ஒட்டுமொத்த பாதுகாப்புத் துறையினரையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இவர்களுக்கான இறுதிச் சடங்குகளைப் பூரண திணைக்கள மரியாதையுடன் நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்று சிறைச்சாலை திணைக்கள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நீதித்துறை, பொருளாதாரம் தொடர்பில் பேச ராஜபக்ஷக்களுக்குத் தார்மீக உரிமை இல்லை.!

அரசு சிறந்த பல திட்டங்களை முன்னெடுக்கும் போது ஊழல்வாதிகள் அனைவரும் அதற்கு எதிராக ஒன்றிணைந்துள்ளனர் என்று தெரிவித்த தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க, நீதித்துறை சுதந்திரம்…

48 0 0
இலங்கை செய்திகள்

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் செம்மணி விவகாரம் தொடர்பில் அழுத்தம் பிரயோகிக்க வேண்டும்.!

செம்மணி மனிதப் புதைகுழி குறித்துச் சுயாதீன விசாரணைகள் நடத்தப்படுவதை உறுதி செய்வதை இலக்காகக் கொண்டு இலங்கை அரசுடன் பேச்சுகளில் ஈடுபடுவதுடன், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில்…

47 0 0
இலங்கை செய்திகள்

கோர விபத்து; பெண் உட்பட இருவர் உயிரிழப்பு.!

காலி, அம்பலன்வத்தை, அனகாரிக தர்மபால மாவத்தையில் நேற்று வியாழக்கிழமை முற்பகல் இடம்பெற்ற உந்துருளி மற்றும் முச்சக்கரவண்டி விபத்தில் பெண் ஒருவரும் ஆண் ஒருவரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அம்பலன்வத்தையிலிருந்து…

28 0 0
இலங்கை செய்திகள்

குருக்கள்மடம் ஸ்ரீலஸ்ரீ செல்லக்கதிர்காம ஆலய தேர்த் திருவிழா.!

கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு, குருக்கள்மடம் அருள்மிகு ஸ்ரீலஸ்ரீ செல்லக்கதிர்காம ஆலயத்தின் சித்திரத் தேர்த் திருவிழா நேற்று ஆயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ சிறப்பாக நடைபெற்றது. மட்டக்களப்பு மாவட்டத்தில்…

33 0 0