உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

சிறை மோதல் தீவிரமடைய அரசே சூழலை ஏற்படுத்தியது.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
44 பார்வைகள்

“நீர்கொழும்பு சிறைச்சாலையில் முதல் நாள் இடம்பெற்ற மோதல் சம்பவத்தை அதிகாரிகள் முறையாகக் கட்டுப்படுத்தியிருந்தால், இரண்டாம் நாள் பாரிய மோதல் ஒன்று ஏற்பட்டிருக்காது. இந்த வன்முறை தீவிரமடைவதற்கான சூழலை அரசே திட்டமிட்டு ஏற்படுத்திக் கொடுத்துள்ளது” என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தொல்பொருளியல் கட்டளைச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இந்தக் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,
“நீர்கொழும்பு சிறைச்சாலையில் அரங்கேறியுள்ள கொடூர சம்பவமானது இந்த அரசின் நிர்வாகப் பலவீனத்தை மிகத் தெளிவாக வெளிப்படுத்தியுள்ளது. முதல் நாள் மோதல் வெடித்த போதே அதனை ஒடுக்கத் தவறியதால் தான் அடுத்த நாள் வன்முறை தீவிரமடைந்தது.

தற்போதைய அரச நிர்வாகக் கட்டமைப்பு முழுமையாக அரசியல்மயமாக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, அரச ஊழியர்களால் எவ்வித அழுத்தங்களுமின்றித் தனித்துவமான முறையில் சரியான தீர்மானங்களை எடுக்க முடியாத துரதிர்ஷ்டவசமான சூழல் இன்று நாட்டில் ஏற்பட்டுள்ளது.

கடந்த 2020ஆம் ஆண்டு இவ்வாறானதொரு சம்பவம் இடம்பெற்ற போது, அதற்குப் பொறுப்பேற்று சிறைச்சாலைகளுக்குப் பொறுப்பான அமைச்சர் உடனடியாகத் தனது பதவியை விலகினார். அதனைத் தொடர்ந்து சுயாதீன விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டன. ஆனால் தற்போதைய அரசில் அவ்வாறான பொறுப்புக்கூறும் தன்மை எதனையும் காண முடியவில்லை.

இலங்கையில் உள்ள சிறைச்சாலைகளில் அதிகபட்சமாக 10 ஆயிரம் கைதிகளை மட்டுமே வைப்பதற்கான பௌதீக வளங்கள் மற்றும் வசதிகள் காணப்படுகின்றன. ஆனால் தற்போது போதைப்பொருள் தடுப்பு என்ற பெயரில் முறையான திட்டமிடல் இன்றி முன்னெடுக்கப்படும் கைதுகளினால், சிறைகளில் சுமார் 40 ஆயிரம் முதல் 45 ஆயிரம் பேர் வரை அடைக்கப்பட்டுள்ளனர். பௌதீகக் கொள்ளளவைத் தாண்டி இவ்வளவு அதிகமானோரைச் சிறையில் அடைக்கும் போது, அங்குள்ள நெரிசல் நிலைமையும் மன அழுத்தமும் மேலும் தீவிரமடையும். நீர்கொழும்பிலும் இதுவே வன்முறையாக வெடித்துள்ளது.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

உடலுக்குள் மறைத்து தங்கம் கடத்த முயன்றவர்களுக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு.!

இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு உடலுக்குள் மறைத்துத் தங்கம் கடத்த முயன்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 11 பேரையும் எதிர்வரும் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிவான்…

27 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தத்தால் ஊழல் வழக்குகளை விரைவுபடுத்த முடியாது.!

முன்வைக்கப்பட்டுள்ள 22ஆவது அரசமைப்பு திருத்த யோசனையின் மூலம் ஊழல் வழக்குகளை ஒருபோதும் விரைவுபடுத்த முடியாது என்றும், அரசு கூறிவரும் கருத்துக்கள் முற்றிலும் பொய் என்பது இதன் மூலம்…

30 0 0
இலங்கை செய்திகள்

அடுத்த ஒன்றரை மாதங்களில் சிறைச்சாலை நெரிசல் குறையும்.!

அரச பகுப்பாய்வாளர் திணைக்களத்தின் அறிக்கைகளை வழங்கும் நடைமுறையை விரைவுபடுத்துவதற்கு அரசு நடவடிக்கை எடுத்துள்ளதால், அடுத்த ஒரு மாதம் அல்லது ஒன்றரை மாதங்களுக்குள் சிறைச்சாலைகளின் நெரிசல் முற்றாகக் குறைக்கப்படும்…

61 0 0
இலங்கை செய்திகள்

நீதித்துறை, பொருளாதாரம் தொடர்பில் பேச ராஜபக்ஷக்களுக்குத் தார்மீக உரிமை இல்லை.!

அரசு சிறந்த பல திட்டங்களை முன்னெடுக்கும் போது ஊழல்வாதிகள் அனைவரும் அதற்கு எதிராக ஒன்றிணைந்துள்ளனர் என்று தெரிவித்த தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க, நீதித்துறை சுதந்திரம்…

52 0 0