உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

மன்னாரில் தொழிற் பயிற்சியை நிறைவு செய்த மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி வைப்பு!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
33 பார்வைகள்

மன்னாரில் தனியார் நிறுவனம் நடத்திய பயிற்சி நெறிகளை நிறைவு செய்த 60 பெண் பயனாளிகளுக்கும், 15 மாற்றுத்திறனாளிகளுக்கு சான்றிதழ் மற்றும் தொழில் உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.

மனிதாபிமான அபிவிருத்திக்கான நிறுவனம் மற்றும் GIZ  நிறுவனமும் இணைந்து 2024 ஆம் ஆண்டிலிருந்து வறுமைக்குட்பட்ட 60 பெண்களை வலுப்படுத்தி தரமான கருவாடு உற்பத்தியூடான நிலையான வருமானத்தை ஈட்டுதல் மற்றும்  15 மாற்றுத்திறனாளிகளுக்கு தொழிற்பயிற்சி ஊடக வீட்டு மின் பொருட்களை திருத்தம் செய்யும் பயிற்சிகளை வழங்கி அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தல் முதலான இலக்குகளைக் கொண்டு இத்திட்டம் மன்னார் மாவட்டத்தில் அமுல்படுத்தப்பட்டு வருகின்றது.

அதன் பிரகாரம், இன்று (07) மன்னார் நகரசபை கலாசார மண்டபத்தில் பயிற்சி நெறிகளை வெற்றிகரமாக நிறைவு செய்து நிலையான வருமானங்களை ஈட்டி வரும் இப் பயனாளிகளுக்கான சான்றிதழ்களும், 15 மாற்றுத்திறனாளிகளுக்கான தொழில் உபகரணங்களும் வழங்கும் நிகழ்வானது சிறப்புடன் நடந்தேறியுள்ளது.

இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.கனகேஸ்வரன் அவர்கள் பங்குபற்றிய துடன் பயனாளிகளுக்கான சான்றிதழ்கள் மற்றும் உபகரணங்கையும் வழங்கி வைத்தார்.

அத்துடன் இத்திட்டத்தின் முன்னேற்றங்களை பாராட்டியதுடன் தொடர்ந்தும் மக்கள் தமது பொருளாதார நிலைகளை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

பயனாளிகள் தமது அனுபவப் பகிர்வின் மூலம் திட்டத்தின் அடைவுகளைம், மேம்பாடுகளையும், நிலைத்த வருமான வழிகளையும் முன் வைத்தமை நம்பிக்கையூட்டும் விடயங்களாக அமைந்தன. 

மேலும் இந்நிகழ்வில் கைத்தொழில் அதிகார சபையின் இயக்குநர்,HDO நிறுவனத்தின் இயக்குனர், GIZ நிறுவனத்தின் பிரதிநிதிகள் ஆகியோரும் பங்குபற்றி தமது கருத்துக்களையும் பாராட்டுக்களையும் வழங்கியிருந்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் வழிபாடு செய்தார் ஜனாதிபதி.!

ஸ்ரீ தலதா மாளிகையின் வருடாந்த எசல பெரஹரா விழாவை முன்னிட்டு கண்டிக்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, நேற்று பிற்பகல் வரலாற்று சிறப்புமிக்க தலதா மாளிகைக்கு…

48 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தம் குறித்து ஜனாதிபதி வெளியிட்ட கருத்துகள் முற்றிலும் தவறானவை.!

அரசமைப்பின் 22ஆவது திருத்தம் தொடர்பாக ஜனாதிபதி வெளியிட்ட கருத்துகள் முற்றிலும் தவறானவை என்றும், அவர் இந்த நாட்டின் உரிமையாளர் அல்ல, மாறாக மக்களின் பிரதிநிதி மாத்திரமே என்பதை…

45 0 0
இலங்கை செய்திகள்

உடலுக்குள் மறைத்து தங்கம் கடத்த முயன்றவர்களுக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு.!

இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு உடலுக்குள் மறைத்துத் தங்கம் கடத்த முயன்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 11 பேரையும் எதிர்வரும் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிவான்…

37 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தத்தால் ஊழல் வழக்குகளை விரைவுபடுத்த முடியாது.!

முன்வைக்கப்பட்டுள்ள 22ஆவது அரசமைப்பு திருத்த யோசனையின் மூலம் ஊழல் வழக்குகளை ஒருபோதும் விரைவுபடுத்த முடியாது என்றும், அரசு கூறிவரும் கருத்துக்கள் முற்றிலும் பொய் என்பது இதன் மூலம்…

34 0 0