உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

நோர்வூட் பிரதேச சபை தவிசாளரின் செயற்பாடுகளுக்கு 14 உறுப்பினர்கள் எதிர்ப்பு.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
30 பார்வைகள்

நோர்வூட் பிரதேச சபையின் தவிசாளர் ஜெஹனஸ் பிரான்சிஸ் எலன் அவர்களின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த 14 உறுப்பினர்கள் இன்று (07) நடைபெற்ற மாதாந்த சபை அமர்வைப் புறக்கணித்தனர்.

சபை அமர்வின் வருகைப் பதிவேட்டில் கையொப்பமிட்டாலும், சபை மண்டபத்திற்குள் செல்லாத நிலையில் உறுப்பினர்கள் சபை மண்டபத்திற்கு முன்னால் நின்றவாறு தமது எதிர்ப்பைத் தெரிவித்தனர்.

சபையை நடத்துவதற்குத் தேவையான கோரம் (குறைந்தபட்ச உறுப்பினர் எண்ணிக்கை) இல்லாத காரணத்தினால், தவிசாளர் சபை அமர்வை இம்மாதம் 21 ஆம் திகதி வரை ஒத்திவைத்தார்.

நகரசபை உறுப்பினர் பந்துசிறி ரணவீர உள்ளிட்ட உறுப்பினர்கள் கூறுகையில், தவிசாளர் எவ்வித முன்மொழிவுகளையும் நடைமுறைப்படுத்துவதில்லை என்றும், கடந்த ஒரு வருடகாலமாக பிரதேசத்தில் எந்தவித அபிவிருத்திப் பணிகளையும் முன்னெடுக்கவில்லை என்றும் குற்றம் சுமத்தினர்.

தவிசாளர் கருத்து தெரிவிக்கையில்,
கோரம் இல்லாத காரணத்தினாலேயே சபை ஒத்திவைக்கப்பட்டதாகவும், தனது செயற்பாடுகள் குறித்து முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்றும் தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நேபாள வெள்ளப்பெருக்கை அடுத்து இலங்கைக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.!

நேபாளம் மற்றும் திபெத் எல்லைப் பகுதியில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு, அப்பகுதியில் நிலநடுக்கம் மற்றும் பனிச்சரிவு காரணமாகவே உருவாகியுள்ளது என பேராதனைப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் முன்னாள்…

2 0 0
இலங்கை செய்திகள்

கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் வழிபாடு செய்தார் ஜனாதிபதி.!

ஸ்ரீ தலதா மாளிகையின் வருடாந்த எசல பெரஹரா விழாவை முன்னிட்டு கண்டிக்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, நேற்று பிற்பகல் வரலாற்று சிறப்புமிக்க தலதா மாளிகைக்கு…

50 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தம் குறித்து ஜனாதிபதி வெளியிட்ட கருத்துகள் முற்றிலும் தவறானவை.!

அரசமைப்பின் 22ஆவது திருத்தம் தொடர்பாக ஜனாதிபதி வெளியிட்ட கருத்துகள் முற்றிலும் தவறானவை என்றும், அவர் இந்த நாட்டின் உரிமையாளர் அல்ல, மாறாக மக்களின் பிரதிநிதி மாத்திரமே என்பதை…

45 0 0
இலங்கை செய்திகள்

உடலுக்குள் மறைத்து தங்கம் கடத்த முயன்றவர்களுக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு.!

இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு உடலுக்குள் மறைத்துத் தங்கம் கடத்த முயன்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 11 பேரையும் எதிர்வரும் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிவான்…

39 0 0