உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

குளத்தில் மீன்பிடிக்கச் சென்ற குடும்பஸ்தர் நீரில் மூழ்கி உயிரிழப்பு.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
32 பார்வைகள்

மட்டக்களப்பு, வாழைச்சேனை, சுங்காங்கேணி குளத்தில் மீன்பிடிக்கச் சென்ற குடும்பஸ்தர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் இன்று செவ்வாய்க்கிழமை பகல் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என்று வாழைச்சேனைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சுங்காங்கேணி பகுதியைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான தம்பிராசா மகேந்திரகுமார் (வயது 45) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார்.

இந்தச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது:-
வாழைச்சேனை நீதிமன்றத்துக்கு அருகாமையிலுள்ள சுங்காங்கேணி – தாமரைக் குளத்தில் மீன்பிடிப்பதற்காக, மேற்படி நபர் நேற்று திங்கட்கிழமை குளத்தில் வலையை வீசிவிட்டு வீடு திரும்பியுள்ளார். இதனைத் தொடர்ந்து, இன்று செவ்வாய்க்கிழமை காலையில் குளத்தில் வீசிய வலையை மீட்டு, மீன்களைப் பிடிப்பதற்காக அவர் மீண்டும் குளத்துக்குச் சென்றுள்ளார்.

எனினும், பகலாகியும் அவர் வீடு திரும்பாததால் சந்தேகமடைந்த உறவினர்கள் குளத்துக்குச் சென்று தேடியுள்ளனர். இதன்போது, அவர் குளத்து நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் சடலமாக மிதப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள், உடனடியாக வாழைச்சேனைப் பொலிஸாருக்குத் தகவல் வழங்கியுள்ளனர்.

சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் சடலத்தை மீட்டதுடன், உயிரிழந்த நபருக்கு வலிப்பு நோய் இருந்தது என்று பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. மீன்பிடிக்கும்போது ஏற்பட்ட திடீர் வலிப்பு காரணமாகவே அவர் நீரில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகின்றது.

நீதிமன்ற உத்தரவைப் பெற்று, சடலத்தைப் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

இந்தச் சம்பவம் குறித்து வாழைச்சேனைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தத்தால் ஊழல் வழக்குகளை விரைவுபடுத்த முடியாது.!

முன்வைக்கப்பட்டுள்ள 22ஆவது அரசமைப்பு திருத்த யோசனையின் மூலம் ஊழல் வழக்குகளை ஒருபோதும் விரைவுபடுத்த முடியாது என்றும், அரசு கூறிவரும் கருத்துக்கள் முற்றிலும் பொய் என்பது இதன் மூலம்…

30 0 0
இலங்கை செய்திகள்

அடுத்த ஒன்றரை மாதங்களில் சிறைச்சாலை நெரிசல் குறையும்.!

அரச பகுப்பாய்வாளர் திணைக்களத்தின் அறிக்கைகளை வழங்கும் நடைமுறையை விரைவுபடுத்துவதற்கு அரசு நடவடிக்கை எடுத்துள்ளதால், அடுத்த ஒரு மாதம் அல்லது ஒன்றரை மாதங்களுக்குள் சிறைச்சாலைகளின் நெரிசல் முற்றாகக் குறைக்கப்படும்…

61 0 0
இலங்கை செய்திகள்

நீதித்துறை, பொருளாதாரம் தொடர்பில் பேச ராஜபக்ஷக்களுக்குத் தார்மீக உரிமை இல்லை.!

அரசு சிறந்த பல திட்டங்களை முன்னெடுக்கும் போது ஊழல்வாதிகள் அனைவரும் அதற்கு எதிராக ஒன்றிணைந்துள்ளனர் என்று தெரிவித்த தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க, நீதித்துறை சுதந்திரம்…

51 0 0
இலங்கை செய்திகள்

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் செம்மணி விவகாரம் தொடர்பில் அழுத்தம் பிரயோகிக்க வேண்டும்.!

செம்மணி மனிதப் புதைகுழி குறித்துச் சுயாதீன விசாரணைகள் நடத்தப்படுவதை உறுதி செய்வதை இலக்காகக் கொண்டு இலங்கை அரசுடன் பேச்சுகளில் ஈடுபடுவதுடன், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில்…

51 0 0