உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

நீதி அமைச்சர் உடனடியாக பதவி விலக வேண்டும் – ஜி.எல்.பீரிஸ் வலியுறுத்தல்

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
33 பார்வைகள்

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் சம்பவத்துக்குப் பொறுப்பேற்பதாக அறிவித்துள்ள நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார, சர்வதேச சம்பிரதாயங்களுக்கு மதிப்பளித்து தனது பதவியை உடனடியாக இராஜிநாமா செய்ய வேண்டும் என்று முன்னாள் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் வலியுறுத்தியுள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இந்த விவகாரம் குறித்துக் கடுமையான கருத்துக்களை முன்வைத்துள்ளார்.

அங்கு அவர் மேலும் கூறியதாவது:-

“நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட துரதிர்ஷ்டவசமான வன்முறைச் சம்பவத்துக்குப் பொறுப்பேற்பதாக நீதி அமைச்சர் பகிரங்கமாகக் கூறியுள்ளார்.

அவ்வாறு அவர் உண்மையாகவே பொறுப்பேற்பதாக இருந்தால், தனது அமைச்சர் பதவியில் இருந்து விலக வேண்டும். அதுவே உலகளாவிய ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட சர்வதேச சம்பிரதாயமாகும்.

அதை விடுத்து, பதவியில் நீடித்துக்கொண்டே ‘பொறுப்பேற்கிறேன்’ என்று வாய் வார்த்தையாகக் கூறுவது எவ்வகையிலும் ஏற்புடைய விடயம் அல்ல.

இதற்குச் சான்றாக, இந்தியாவில் கடந்த காலங்களில் பாரிய ரயில் விபத்துக்கள் ஏற்பட்ட தருணங்களில், அதற்குத் துறைசார் அமைச்சர்கள் பொறுப்பல்லாதபோதும், பொதுநலவாய சம்பிரதாயங்களுக்கு மதிப்பளித்துத் தங்களது பதவிகளைப் நாடாளுமன்றத்தில் இராஜிநாமா செய்த வரலாறுகள் உள்ளன.

அதே உன்னதமான அரசியல் நாகரிகத்தையும், வழியையும் எமது நாட்டு நீதி அமைச்சரும் இந்தச் சந்தர்ப்பத்தில் பின்பற்ற வேண்டும். வெறும் அறிக்கைகளுடன் நின்றுவிடாமல், உடனடியாக அவர் பதவி விலக வேண்டும்.

இலங்கை அரசியல் வரலாற்றில் இவ்வாறான பொறுப்புக்கூறல்கள் மிக முக்கியம் என்பதால், அரசு இந்த விவகாரத்தில் சர்வதேச ரீதியிலான ஒழுக்கநெறியைக் கடைப்பிடிக்க வேண்டும்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தத்தால் ஊழல் வழக்குகளை விரைவுபடுத்த முடியாது.!

முன்வைக்கப்பட்டுள்ள 22ஆவது அரசமைப்பு திருத்த யோசனையின் மூலம் ஊழல் வழக்குகளை ஒருபோதும் விரைவுபடுத்த முடியாது என்றும், அரசு கூறிவரும் கருத்துக்கள் முற்றிலும் பொய் என்பது இதன் மூலம்…

30 0 0
இலங்கை செய்திகள்

அடுத்த ஒன்றரை மாதங்களில் சிறைச்சாலை நெரிசல் குறையும்.!

அரச பகுப்பாய்வாளர் திணைக்களத்தின் அறிக்கைகளை வழங்கும் நடைமுறையை விரைவுபடுத்துவதற்கு அரசு நடவடிக்கை எடுத்துள்ளதால், அடுத்த ஒரு மாதம் அல்லது ஒன்றரை மாதங்களுக்குள் சிறைச்சாலைகளின் நெரிசல் முற்றாகக் குறைக்கப்படும்…

61 0 0
இலங்கை செய்திகள்

நீதித்துறை, பொருளாதாரம் தொடர்பில் பேச ராஜபக்ஷக்களுக்குத் தார்மீக உரிமை இல்லை.!

அரசு சிறந்த பல திட்டங்களை முன்னெடுக்கும் போது ஊழல்வாதிகள் அனைவரும் அதற்கு எதிராக ஒன்றிணைந்துள்ளனர் என்று தெரிவித்த தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க, நீதித்துறை சுதந்திரம்…

51 0 0
இலங்கை செய்திகள்

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் செம்மணி விவகாரம் தொடர்பில் அழுத்தம் பிரயோகிக்க வேண்டும்.!

செம்மணி மனிதப் புதைகுழி குறித்துச் சுயாதீன விசாரணைகள் நடத்தப்படுவதை உறுதி செய்வதை இலக்காகக் கொண்டு இலங்கை அரசுடன் பேச்சுகளில் ஈடுபடுவதுடன், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில்…

51 0 0