உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

கொக்கிளாய் – புல்மோட்டை இணைப்புப் பாலத்தின் முன்னேற்றம் தொடர்பில் கேள்வி எழுப்பிய ரவிகரன் எம்.பி.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
24 பார்வைகள்

கொக்கிளாய் – புல்மோட்டை இணைப்புப் பாலம் அமைப்பதன் முன்னேற்றம் தொடர்பில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்நிலையில் எதிர்வரும் 25ஆம் திகதி முல்லைத்தீவிற்கு விஜயம் மேற்கொண்டு குறித்த கொக்கிளாய் புல்மோட்டை இணைப்புப் பாலம் அமைப்பது தொடர்பான சாத்தியவள ஆய்வறிக்கைகளை பரிசீலிக்கவுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் இதன்போது பதிலளித்துள்ளார்.

நாடாளுமன்றக் குழு அறையில் 07.07.2026 இன்று இடம்பெற்ற போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அலுவல்கள் அமைச்சின் அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்திலலேயே இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
கடந்த 21.05.2026 அன்று நாடாளுமன்ற குழு அறையில் இடம்பெற்ற போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அலுவல்கள் அமைச்சின் அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் கொக்கிளாய் புல்மோட்டை இணைப்புப் பாலத்தை அமைப்பது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் வலியுறுத்தியிருந்தார்.

அதற்கமைய கொக்கிளாய் புல்மோட்டை இணைப்புப் பாலத்தின் சாத்தியவள ஆய்வொன்றை வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் கீழ் மேற்கொள்ளுதல், சாத்தியவள ஆய்வை மேற்கொள்வதற்காக வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு வழங்கப்பட்டுள்ள நிதி ஒதுக்கீடுகளைப் பயன்படுத்துதல் ஆகிய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவருக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டிருந்தன.

அவ்வாறு வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவருக்கு வழங்கப்பட்ட அறிவுறுத்தல்கள் பற்றிய முன்னேற்றம் குறித்து 07.07.2026 இன்று இடம்பெற்ற போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அலுவல்கள் அமைச்சின் அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் ஆராயப்பட்டது.

இந்நிலையில் எதிர்வரும் 25.07.2026 அன்று முல்லைத்தீவிற்கு தாம் வருகைதரவுள்ளதாகத் தெரிவித்த வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர், சாத்தியவள ஆய்வறிக்கைகள் தொடர்பில் பரசீலித்து அதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமெனத் தெரிவித்தார்.

அந்தவகையில் எதிர்வரும் 25ஆம் திகதி முல்லைத்தீவிற்கு விஜயம் மேற்கொண்டு குறித்த கொக்கிளாய் புல்மோட்டை இணைப்புப் பாலம் அமைப்பது தொடர்பான சாத்தியவள ஆய்வறிக்கைகளை பரிசீலிக்கும் குறித்த கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன், முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் உபாலி சமரசிங்க, முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் ஆகிய தரப்பினரை இணைத்துக்கொள்ளுமாறு இதன்போது அமைச்சர் விமல் ரத்நாயக்க வீதி அபிவிருத்தி அதிகாரசபைத் தலைவரிடம் தெரிவித்தார்.

அத்தோடு குறித்த கொக்கிளாய் புல்மோட்டை இணைப்புப்பாலம் அமைப்பது தொடர்பான சாத்தியவள ஆய்வறிக்கைக்குரிய நிதியை தமது அமைச்சிலிருந்து பெற்றுக்கொள்ளுமாறு இதன்போது அமைச்சர் விமல் ரத்நாயக்கவால் தெரிவிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தத்தால் ஊழல் வழக்குகளை விரைவுபடுத்த முடியாது.!

முன்வைக்கப்பட்டுள்ள 22ஆவது அரசமைப்பு திருத்த யோசனையின் மூலம் ஊழல் வழக்குகளை ஒருபோதும் விரைவுபடுத்த முடியாது என்றும், அரசு கூறிவரும் கருத்துக்கள் முற்றிலும் பொய் என்பது இதன் மூலம்…

30 0 0
இலங்கை செய்திகள்

அடுத்த ஒன்றரை மாதங்களில் சிறைச்சாலை நெரிசல் குறையும்.!

அரச பகுப்பாய்வாளர் திணைக்களத்தின் அறிக்கைகளை வழங்கும் நடைமுறையை விரைவுபடுத்துவதற்கு அரசு நடவடிக்கை எடுத்துள்ளதால், அடுத்த ஒரு மாதம் அல்லது ஒன்றரை மாதங்களுக்குள் சிறைச்சாலைகளின் நெரிசல் முற்றாகக் குறைக்கப்படும்…

61 0 0
இலங்கை செய்திகள்

நீதித்துறை, பொருளாதாரம் தொடர்பில் பேச ராஜபக்ஷக்களுக்குத் தார்மீக உரிமை இல்லை.!

அரசு சிறந்த பல திட்டங்களை முன்னெடுக்கும் போது ஊழல்வாதிகள் அனைவரும் அதற்கு எதிராக ஒன்றிணைந்துள்ளனர் என்று தெரிவித்த தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க, நீதித்துறை சுதந்திரம்…

51 0 0
இலங்கை செய்திகள்

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் செம்மணி விவகாரம் தொடர்பில் அழுத்தம் பிரயோகிக்க வேண்டும்.!

செம்மணி மனிதப் புதைகுழி குறித்துச் சுயாதீன விசாரணைகள் நடத்தப்படுவதை உறுதி செய்வதை இலக்காகக் கொண்டு இலங்கை அரசுடன் பேச்சுகளில் ஈடுபடுவதுடன், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில்…

51 0 0