உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

மட்டக்களப்பு சிறையில் பரபரப்பு; கைதி ஒருவர் உயிரை மாய்க்க முயற்சி.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
27 பார்வைகள்

மட்டக்களப்பு சிறைச்சாலையில் கைதி ஒருவர் தனது கழுத்தை பிளேட்டினால் அறுத்து தற்கொலைக்கு முயன்ற அதிர்ச்சி சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளது.

இந்தச் சம்பவத்தில் படுகாயமடைந்த இளைஞர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,
அக்கரைப்பற்று பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞன் ஒருவர் கஞ்சா போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டிருந்தார். அவர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, அவர் நீதிமன்ற உத்தரவின் பேரில் மட்டக்களப்பு சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், இன்று நண்பகல் 12 மணியளவில் மேற்படி இளைஞர் திடீரெனத் தனது கழுத்தை பிளேட்டினால் அறுத்து தற்கொலை செய்ய முயற்சித்துள்ளார். இதனால் படுகாயமடைந்த அவரை உடனடியாக மீட்ட சிறைச்சாலை அதிகாரிகள், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் சிறைச்சாலை வளாகத்துக்குள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தத்தால் ஊழல் வழக்குகளை விரைவுபடுத்த முடியாது.!

முன்வைக்கப்பட்டுள்ள 22ஆவது அரசமைப்பு திருத்த யோசனையின் மூலம் ஊழல் வழக்குகளை ஒருபோதும் விரைவுபடுத்த முடியாது என்றும், அரசு கூறிவரும் கருத்துக்கள் முற்றிலும் பொய் என்பது இதன் மூலம்…

30 0 0
இலங்கை செய்திகள்

அடுத்த ஒன்றரை மாதங்களில் சிறைச்சாலை நெரிசல் குறையும்.!

அரச பகுப்பாய்வாளர் திணைக்களத்தின் அறிக்கைகளை வழங்கும் நடைமுறையை விரைவுபடுத்துவதற்கு அரசு நடவடிக்கை எடுத்துள்ளதால், அடுத்த ஒரு மாதம் அல்லது ஒன்றரை மாதங்களுக்குள் சிறைச்சாலைகளின் நெரிசல் முற்றாகக் குறைக்கப்படும்…

61 0 0
இலங்கை செய்திகள்

நீதித்துறை, பொருளாதாரம் தொடர்பில் பேச ராஜபக்ஷக்களுக்குத் தார்மீக உரிமை இல்லை.!

அரசு சிறந்த பல திட்டங்களை முன்னெடுக்கும் போது ஊழல்வாதிகள் அனைவரும் அதற்கு எதிராக ஒன்றிணைந்துள்ளனர் என்று தெரிவித்த தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க, நீதித்துறை சுதந்திரம்…

51 0 0
இலங்கை செய்திகள்

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் செம்மணி விவகாரம் தொடர்பில் அழுத்தம் பிரயோகிக்க வேண்டும்.!

செம்மணி மனிதப் புதைகுழி குறித்துச் சுயாதீன விசாரணைகள் நடத்தப்படுவதை உறுதி செய்வதை இலக்காகக் கொண்டு இலங்கை அரசுடன் பேச்சுகளில் ஈடுபடுவதுடன், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில்…

51 0 0