உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

மருதம் கலைக்கூடல் மன்றத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற சமூக விழிப்புணர்வு நிகழ்வு.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
36 பார்வைகள்

மருதம் கலைக்கூடல் மன்றத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற சமூக விழிப்புணர்வு நிகழ்வு சாய்ந்தமருது கலாசார மத்திய நிலையத்தில் மன்றத்தின் தலைவர் அஸ்வான் சக்காப் மௌலானா தலைமையில் (03) இடம்பெற்றது.

மருதக் கலைஞர்களின் குடும்ப குதூகல நிகழ்வாக இடம்பெற்ற இந்நிகழ்வில், விழிப்புணர்வூட்டும் வகையிலான நாடகங்கள், கவிதைகள், பாடல்கள், அபிநயம் என நிகழ்வை மெருகூட்டின.

போதையால் மனிதன் படும் இன்னல்கள் மற்றும் வட்டி கலாசாரத்தால் சமூகத்தில் ஏற்பட்டுள்ள சீர்கேடுகள், சிறுவர் துஷ்பிரயோகம், பாலியல் துஷ்பிரயோகம் போன்றவற்றை வலியுறுத்தி, அதிலிருந்து மீளும் வகையிலான நாடகங்கள் நிகழ்வில் அரங்கேற்றப்பட்டு, அதிதிகள் மற்றும் பார்வையாளர்களுக்கு காட்சிப்படுத்தப்பட்டன.

எமது சமூகத்தை சீரழிக்கின்ற சமூக சீர்கேடுகளை எமது சமூகத்தில் இருந்து ஒழித்துக்கட்டும் நோக்கிலும் சமூகத்திற்கு விழிப்புணர்வூட்டி அதனைக் கட்டுப்படுத்தும் வகையிலும் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில், அரங்கேற்றப்பட்ட நாடகங்கள் வந்திருந்த அதிதிகள் மற்றும் பார்வையாளர்கள் உட்பட பலரது பாராட்டையும் பெற்றன.

இந்நிகழ்வில், மருதமுனையின் சிறந்த கலைஞரும் பல்வேறு விருதுகளுக்கு சொந்தக்காரருமான ஆரிப் ஆதம்பாவா டில்மானி பாறூக் கலைத்துறையில் ஆற்றிவரும் சிறப்பான பங்களிப்புக்காகவும், அவரது அயராத சேவைக்காகவும் மருதம் கலைக்கூடல் மன்றத்தினால் பொன்னாடைகள் போர்த்தியும் நினைவுச்சின்னங்கள் வழங்கியும் பாராட்டி கௌரவிக்கப்பட்டார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நேபாள வெள்ளப்பெருக்கை அடுத்து இலங்கைக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.!

நேபாளம் மற்றும் திபெத் எல்லைப் பகுதியில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு, அப்பகுதியில் நிலநடுக்கம் மற்றும் பனிச்சரிவு காரணமாகவே உருவாகியுள்ளது என பேராதனைப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் முன்னாள்…

38 0 0
இலங்கை செய்திகள்

கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் வழிபாடு செய்தார் ஜனாதிபதி.!

ஸ்ரீ தலதா மாளிகையின் வருடாந்த எசல பெரஹரா விழாவை முன்னிட்டு கண்டிக்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, நேற்று பிற்பகல் வரலாற்று சிறப்புமிக்க தலதா மாளிகைக்கு…

50 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தம் குறித்து ஜனாதிபதி வெளியிட்ட கருத்துகள் முற்றிலும் தவறானவை.!

அரசமைப்பின் 22ஆவது திருத்தம் தொடர்பாக ஜனாதிபதி வெளியிட்ட கருத்துகள் முற்றிலும் தவறானவை என்றும், அவர் இந்த நாட்டின் உரிமையாளர் அல்ல, மாறாக மக்களின் பிரதிநிதி மாத்திரமே என்பதை…

45 0 0
இலங்கை செய்திகள்

உடலுக்குள் மறைத்து தங்கம் கடத்த முயன்றவர்களுக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு.!

இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு உடலுக்குள் மறைத்துத் தங்கம் கடத்த முயன்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 11 பேரையும் எதிர்வரும் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிவான்…

39 0 0