உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

திடீரென தீப்பிடித்து எரிந்த வர்த்தக நிலையம்.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
32 பார்வைகள்

மட்டக்களப்பு நகர மத்தியிலுள்ள வர்த்தக நிலையங்கள் சிலவற்றில் இன்று (07) அதிகாலை ஏற்பட்ட தீயானது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டது.

இன்று அதிகாலை 5.00 மணியளவில் திடீரென வர்த்தக நிலையம் ஒன்றில் ஏற்பட்ட தீயானது அடுத்து இருந்த கடைக்கும் வேகமாகப் பரவியுள்ளது.

இது தொடர்பில் மட்டக்களப்பு மாநகரசபையின் தீயணைக்கும் படையினருக்கு அறிக்கப்பட்ட நிலையில் விரைவாக தீயினை அணைக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் காத்தான்குடி நகரசபை தீயணைக்கும் பிரிவு, மட்டக்களப்பு தலைமையக தீயணைப்பு பிரிவு மற்றும் பொதுமக்களின் உதவியுடன் தீ கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்த தீவிபத்தினால் இரண்டு வர்த்தக நிலையங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதை காணமுடிகின்றது.

மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் சிவம்பாக்கியநாதன், காத்தான்குடி நகரசபை தலைவர் அஸ்பர் மற்றும் மாநகரசபை உறுப்பினர்களும் சம்பவ இடத்திற்கு வருகைதந்து தீயினை கட்டுப்படுத்துவதற்கான அறிவுறுத்தல்களை வழங்கினர்.

இந்த தீ விபத்து காரணமாக ஒரு வர்த்தக நிலையம் முற்றாக எரிந்துள்ளதுடன் மற்றைய வர்த்தக நிலையம் பாரிய சேதத்திற்குள்ளாகியுள்ளதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.

தீ ஏற்பட்டமைக்கான காரணம் இதுவரையில் அறியப்படாத நிலையில் இது தொடர்பான விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மல்வத்து, அஸ்கிரி மகாநாயக்க தேரர்களை சந்தித்து ஆசி பெற்ற ஜனாதிபதி அநுரகுமார.!

கண்டி வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகையின் வருடாந்த எசல பெரஹரா விழாவில் கலந்துகொள்வதற்காக கண்டிக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, நேற்று வியாழக்கிழமை மல்வத்து…

50 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்த விவகாரம்; நீதிமன்றத்துக்கு அப்பால் செயற்பட அரசு தயார்.!

அரசமைப்பின் 22ஆவது திருத்தம் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வெளியிட்டுள்ள நிலைப்பாடு முற்றிலும் தவறானது என்றும், ஒருசில குறுகிய தரப்பினரது எதிர்ப்புகளுக்காக இத்தீர்மானத்தை மீளப்பெறப் போவதில்லை என…

53 0 0
இலங்கை செய்திகள்

நேபாள வெள்ளப்பெருக்கை அடுத்து இலங்கைக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.!

நேபாளம் மற்றும் திபெத் எல்லைப் பகுதியில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு, அப்பகுதியில் நிலநடுக்கம் மற்றும் பனிச்சரிவு காரணமாகவே உருவாகியுள்ளது என பேராதனைப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் முன்னாள்…

57 0 0
இலங்கை செய்திகள்

கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் வழிபாடு செய்தார் ஜனாதிபதி.!

ஸ்ரீ தலதா மாளிகையின் வருடாந்த எசல பெரஹரா விழாவை முன்னிட்டு கண்டிக்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, நேற்று பிற்பகல் வரலாற்று சிறப்புமிக்க தலதா மாளிகைக்கு…

54 0 0