உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

அந்தோனியார் ஆலயத்திற்கு செல்லும் பாதையை விடுவிக்கக் கோரி முள்ளிக்குளத்தில் கவனயீர்ப்பு போராட்டம்!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
36 பார்வைகள்

முள்ளிக்குளம் கிராமத்தில் இருந்து மறிச்சிக்கட்டி பூக்குளம் ஊடாக பள்ள கண்டல் அந்தோனியார் ஆலயத்திற்கு செல்லும் பாதையை வழிபாடுகளுக்காக திறந்து விடக்கோரி முள்ளிக்குளம் மக்கள் இன்றைய தினம் திங்கட்கிழமை (6) காலை முள்ளிக்குளம் பிரதான பாதையில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

பள்ள கண்டன் புனித அந்தோனியார் ஆலய கொடியேற்றம் யூலை மாதம் 8 ஆம் திகதி இடம் பெற்று தொடர்ந்து நவநாள் வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டு யூலை மாதம் 12ஆம் திகதி திருவிழா திருப்பலி ஒப்புக் கொடுக்கப்படுகின்றமை வழமை.

கடந்த காலங்களில் தொடர்ச்சியாக திருவிழா திருப்பலி இடம் பெற்று வந்த நிலையில் மக்கள் எவ்வித அசௌகரியங்கள் இன்றி குறித்த பாதையூடாக பள்ளங்கண்டல் அந்தோனியார் ஆலயத்திற்கு சென்று வந்தனர்.

மன்னார் மாவட்டத்தையும் வட மாகாணத்தின் பல பகுதிகளையும் சேர்ந்த கத்தோலிக்க மக்கள் நீண்ட காலமாக பள்ள கண்டல் ஆலய திருவிழாவுக்கு சென்று வருகின்றமை வழமை.

இந்த நிலையில் தற்போது மன்னார் முள்ளிக்குளம் இருந்து மறிச்சிக்கட்டி பூக்குளம் வழியாக பள்ள கண்டல் ஆலயத்திற்கு செல்ல வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் அனுமதி மறுத்துள்ளதாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த பாதையூடாக தாம் பள்ளகண்டல் ஆலயத்திற்கு செல்ல 30 கிலோமீட்டர் பயணம் செய்ய வேண்டும்.தற்போது தம்மை அனுராதபுரம் பாதையூடாக செல்லுமாறு கூறுவதாகவும் அப்படி சென்றால் 250 கிலோ மீற்றர் தூரம் பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கொண்ட முள்ளிக்குளம் கிராம மக்கள் தெரிவித்தனர்.

அரசாங்கம் உரிய குறித்த விஷயத்தில் துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து முள்ளிக்குளம் கிராம மக்கள் இன்று (6) திங்கட்கிழமை காலை 11 மணியளவில் முள்ளிக்குளம் பிரதான வீதியில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் பல்வேறு வாசகங்கள் எழுதிய பதாகைகளை ஏந்தியவாறு அமைதியான முறையில் ஈடுபட்டனர்.

குறித்த போராட்டத்தில் முள்ளிக்குளம் பங்குத்தந்தை அருட்தந்தை டெரன்ஸ் குளாஸ்,மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் பணிப்பாளர் ஜாட்சன் பிகிராடோ,பணியாளர்கள்,மனித உரிமை செயல்பாட்டாளர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.

குறித்த மக்களின் கோரிக்கையாக பள்ளகண்டல் அந்தோனியார் ஆலய திருவிழாவிற்கான கொடியேற்றம் எதிர்வரும் 8 ஆம் திகதி இடம் பெற உள்ள நிலையில் முள்ளிக்குளம் கிராமத்தில் இருந்து மறிச்சிக்கட்டி பூக்குளம் ஊடாக பள்ளகண்டல் அந்தோனியார் ஆலயத்திற்கு செல்லும் பிரதான பாதையை திறந்து எதிர்வரும் 12ஆம் திகதி இடம் பெற உள்ள திருவிழா வரை தமக்கு குறித்த பாதையை பயன்படுத்த அனுமதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்துள்ளனர்.

குறித்த விடயம் தொடர்பாக உரிய திணைக்கள அதிகாரிகள் மற்றும் திணைக்கள தலைவர்கள் துரித நடவடிக்கை யை மேற்கொள்ள வேண்டும் என அந்த மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மல்வத்து, அஸ்கிரி மகாநாயக்க தேரர்களை சந்தித்து ஆசி பெற்ற ஜனாதிபதி அநுரகுமார.!

கண்டி வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகையின் வருடாந்த எசல பெரஹரா விழாவில் கலந்துகொள்வதற்காக கண்டிக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, நேற்று வியாழக்கிழமை மல்வத்து…

50 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்த விவகாரம்; நீதிமன்றத்துக்கு அப்பால் செயற்பட அரசு தயார்.!

அரசமைப்பின் 22ஆவது திருத்தம் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வெளியிட்டுள்ள நிலைப்பாடு முற்றிலும் தவறானது என்றும், ஒருசில குறுகிய தரப்பினரது எதிர்ப்புகளுக்காக இத்தீர்மானத்தை மீளப்பெறப் போவதில்லை என…

53 0 0
இலங்கை செய்திகள்

நேபாள வெள்ளப்பெருக்கை அடுத்து இலங்கைக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.!

நேபாளம் மற்றும் திபெத் எல்லைப் பகுதியில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு, அப்பகுதியில் நிலநடுக்கம் மற்றும் பனிச்சரிவு காரணமாகவே உருவாகியுள்ளது என பேராதனைப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் முன்னாள்…

57 0 0
இலங்கை செய்திகள்

கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் வழிபாடு செய்தார் ஜனாதிபதி.!

ஸ்ரீ தலதா மாளிகையின் வருடாந்த எசல பெரஹரா விழாவை முன்னிட்டு கண்டிக்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, நேற்று பிற்பகல் வரலாற்று சிறப்புமிக்க தலதா மாளிகைக்கு…

54 0 0