உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
31 திங்கள்

நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற நான்கு விபத்துக்களில் நால்வர் உயிரிழப்பு!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
36 பார்வைகள்

இலங்கையின் பல பகுதிகளில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற கோர வாகன விபத்துகளில் சிக்கி நால்வர் உயிரிழந்துள்ளனர் என்று பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய கேகாலையின் ருவன்வெல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெத்தாவல பகுதியில் இருந்து வஹரக நோக்கிய உப வீதியில், செலுத்தப்பட்ட டிரக்டர் ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி அருகிலிருந்த கட்டடத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த சாரதி, கோனகல்தெனிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

விபத்தில் வஹரக பகுதியைச் சேர்ந்த 55 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.

இதேபோன்று கம்பகா பேலியகொட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பட்டி சந்தி ஊடாக, சென்ற லொறியொன்று, அதே திசையில் பயணித்த சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த சைக்கிள் ஓட்டி, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் களனி பகுதியைச் சேர்ந்த 48 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அத்துடன் ஹம்பாந்தோட்டை தங்கல்ல – வீரகெட்டிய வீதியின் வல்கம் எலிய பகுதியில் செலுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளொன்று, அதன் வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் வீதியை விட்டு விலகி அருகிலிருந்த மரத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதில் படுகாயமடைந்த சாரதி தங்கல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

விபத்தில் தங்கல்ல பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய இளைஞரே உயிரிழந்துள்ளார்.

மேலும், புத்தளம் மதுரங்குளிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடயாமட்ட – உடப்புவ வீதியின் சமீரகம பகுதியில், சென்ற மோட்டார் சைக்கிள் ஒன்று, தனக்கு முன்னால் சென்ற லொறியை முந்திச் செல்ல முயன்றுள்ளது.

இதன்போது, எதிர்த்திசையில் வந்த பேருந்துடன் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதியதில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிள் சாரதி, கொத்தாந்தீவு வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்படும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் கொத்தாந்தீவு பகுதியைச் சேர்ந்த 48 வயதுடையவராவார்.

விபத்துடன் தொடர்புடைய பேருந்தின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ் அனைத்து விபத்துகள் தொடர்பிலும் அந்தந்தப் பகுதிப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் டேவிட் பைன் – விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே சந்திப்பு.!

இலங்கைக்கான நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் டேவிட் பைன் (David Pine) அவர்களுக்கும், இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே அவர்களுக்கும் இடையிலான விசேட இருதரப்பு…

72 0 0
இலங்கை செய்திகள்

மூதூரில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கவனயீர்ப்பு போராட்டம்.!

மூதூர் பிரதேச செயலகத்தில் கடமையாற்றி வரும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று (31) பிரதேச செயலகத்துக்கு முன்னால் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அரச மற்றும்…

41 0 0
இலங்கை செய்திகள்

குளவிக் கொட்டுக்கு இலக்கான பெண்கள் வைத்தியசாலையில் அனுமதி.!

ஹட்டன் பொலிஸ் பிரிவில் உள்ள டிக்கோயா வணராஜா தோட்ட மேற் பிரிவில் தேயிலைக் கொழுந்து பறித்து கொண்டிருந்த வேளை தேயிலை செடிகளின் கீழ் பகுதியில் கட்டப்பட்டிருந்த குளவி…

37 0 0
இலங்கை செய்திகள்

அரச சார்பற்ற நிறுவனங்கள் மீதான பதிவுக்கு எதிராக போராட்டம்.!

கிளிநொச்சி பழைய கச்சேரி முன்பாக அரச சார்பற்ற நிறுவனங்கள் மீதான பதிவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்று (31-08-2026) இன்றைய தினம் 9 மணிக்கு முன்னெடுக்கப்பட்டது. அரச சார்பற்ற…

52 0 0