பந்தை சேதப்படுத்திய குற்றச்சாட்டு: பக்கர் சமான்க்கு போட்டித் தடை .!
பக்கர் சமான் மீது பந்தை சேதப்படுத்திய குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள நிலையில், குறைந்தது ஒரு போட்டித் தடையை அவர் எதிர்கொள்ள நேரிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.பாகிஸ்தான் சுப்பர் லீக் தொடரில், கராச்சி கிங்ஸ் மற்றும் லாகூர் கலந்தர்ஸ் அணிகள் மோதிய போட்டியின்போது இந்தச் சம்பவம் இடம்பெற்றது.
போட்டியின் இறுதி ஒவரில் கராச்சி கிங்ஸ் அணி 14 ஓட்டங்கள் தேவைப்பட்டிருந்த நிலையில், பந்தை சேதப்படுத்தியதாகக் கருதப்பட்டதால் எதிரணிக்கு ஐந்து அபராத ஓட்டங்கள் வழங்கப்பட்டன. இதனால் கராச்சி கிங்ஸ் அணியின் வெற்றி எளிதானதாக மாறியது.
இதனையடுத்து, லாகூர் கலந்தர்ஸ் அணியின் வீரரான பக்கர் சமான் மீது மூன்றாம் நிலை குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.இந்தக் குற்றச்சாட்டு உறுதிப்படுத்தப்பட்டால், குறைந்தபட்சம் ஒரு போட்டித் தடையும், அதிகபட்சம் இரண்டு போட்டித் தடையும் விதிக்கப்படலாம்.இது தொடர்பான விசாரணையை போட்டி மத்தியஸ்தராக உள்ள ரொஷான் மஹானாம அடுத்த சில நாட்களில் முன்னெடுக்கவுள்ளார்.