உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

யாழில் புகையிரதத்துடன் மோதிய உந்துருளி; சம்பவ இடத்திலேயே ஒருவர் உ**யிரிழப்பு.!

இலங்கை செய்திகள் 58 நிமிடங்கள் முன்
89 பார்வைகள்

யாழ்ப்பாணம், அரியாலை புங்கன்குளம் பகுதியில் இடம்பெற்ற புகையிரத விபத்தில் தந்தையொருவர் உயிரிழந்துள்ளதுடன், அவரது மகள் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த விபத்து புங்கன்குளம் புகையிரத நிலையத்திற்கு அருகிலுள்ள கடவையில் இடம்பெற்றுள்ளது.

பாடசாலை முடிவடைந்த பின்னர் தனது மகளை உந்துருளியில் ஏற்றிக்கொண்டு தந்தை வீடு நோக்கி பயணித்துள்ளார். இதன்போது புங்கன்குளம் புகையிரத கடவையை கடக்க முற்பட்டபோது, உந்துருளி புகையிரதத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் தந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ள நிலையில், படுகாயமடைந்த அவரது மகள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகள் குழு எதிர்க்கட்சித் தலைவர் சஜித்துடன் சந்திப்பு.!

இலங்கையின் பொருளாதாரம் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் திட்டங்கள் தொடர்பான பல முக்கிய விடயங்கள் குறித்துக் கலந்துரையாடுவதற்காக, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவை சர்வதேச நாணய நிதியத்தின்…

83 0 0
இலங்கை செய்திகள்

22 ஆவது திருத்தச் சட்டமூலம்; வெள்ளி மாலை வாக்கெடுப்பு.!

அரசமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலம் மீதான நாடாளுமன்ற வாக்கெடுப்பு எதிர்வரும் 25ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 7 மணிக்கு நடத்தப்படவுள்ளது. 22ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு எதிராகத் தாக்கல்…

89 0 0
இலங்கை செய்திகள்

அனோஜனின் விடுதலைக்காக யாழ்ப்பாண முஸ்லிம்களும் குரல் கொடுக்கின்றோம்.!

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விவகாரத்தை எதிர்கொண்டு வரும் கல்முனையைச் சேர்ந்த சிவராசா அனோஜனின் உயிரைப் பாதுகாத்து அவரை விடுவிக்க வேண்டும் என்ற தேசிய மற்றும் சர்வதேச…

40 0 0
இலங்கை செய்திகள்

அனோஜனைக் காப்பாற்ற அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையுடன் இந்து குருமார்கள் அவசர சந்திப்பு.!

சவூதி அரேபியாவில் மரண தண்டனைக்கு உட்படுத்தப்பட்டுள்ள அனோஜன் என்ற தமிழ் இளைஞருக்கு மன்னிப்புப் பெற்றுக்கொடுத்து, அவரை மரண தண்டனையிலிருந்து பாதுகாப்பதற்குத் தலையிடுமாறு கோரி, இலங்கையின் முதன்மை இந்து…

85 0 0