உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் நசீம் ஷாவுக்கு அபராதம் விதிப்பு.!

49 பார்வைகள்

பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் நசீம் ஷாவுக்கு 20 மில்லியன் பாகிஸ்தான் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.பஞ்சாப் மாநில முதலமைச்சர் மரியம் நவாஸை விமர்சிக்கும் வகையில் நசீம் ஷாவின் உத்தியோகபூர்வ சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிடப்பட்ட கருத்தே இந்த அதிரடி நடவடிக்கைக்குக் காரணமாகும்.

மத்திய கிழக்கு ஆசியாவில் நிலவும் போர் பதற்றம் மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக, நடப்பு பி.எஸ்.எல் தொடர் ரசிகர்கள் இன்றி மூடிய மைதானத்தில் நடைபெறும் என பாகிஸ்தான் கிரிக்கெட் சபை அறிவித்திருந்தது.

இருப்பினும், தொடரின் ஆரம்பப் போட்டியில் முதலமைச்சர் மரியம் நவாஸ் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் மைதானத்திற்கு வருகை தந்து வீரர்களைச் சந்தித்தனர்.

இதனை விமர்சிக்கும் வகையில், லோர்ட்ஸ் மைதானத்தில் மகாராணிக்கு அளிக்கப்படும் மரியாதையைப் போல இவருக்கு ஏன் அளிக்கப்படுகிறது? என நசீம் ஷாவின் கணக்கிலிருந்து ஒரு பதிவு இடப்பட்டது.

சற்று நேரத்திலேயே அந்தப் பதிவு நீக்கப்பட்டதுடன், தனது கணக்கு முடக்கப்பட்டதாக நசீம் ஷா விளக்கமளித்திருந்தார்.இது தொடர்பாக நடைபெற்ற விசாரணையில் நசீம் ஷா நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார்.

இந்தநிலையில் சினேகபூர்வ ஒப்பந்தத்தின் சரத்துக்களை மீறியதாக நசீம் ஷாவுக்கு 2 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.பாகிஸ்தான் கிரிக்கெட் வரலாற்றில் வீரர் ஒருவருக்கு விதிக்கப்பட்ட மிகப்பெரிய அபராதமாக இது கருதப்படுகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

விளையாட்டுச் செய்திகள்

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவிற்கு முதலாவது தங்கப் பதக்கம்

ஜப்பானின் நிஷினில் உள்ள கோரோகி விளையாட்டுப் பூங்காவில் இன்று (22) நடைபெற்ற இறுதிப் போட்டியில் இலங்கை அணியை 147 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, ஆசிய விளையாட்டுப் போட்டிகளில்…

39 0 0
விளையாட்டுச் செய்திகள்

தனது இறுதி சர்வதேச போட்டிக்கான சிறப்பு ஜெர்சியை அறிமுகப்படுத்தினார் மெஸ்ஸி

அர்ஜென்டினா அணிக்காக தனது கடைசி சர்வதேசப் போட்டியில் விளையாடவுள்ள கால்பந்து நட்சத்திரம் லியோனல் மெஸ்ஸி, அதற்காக வடிவமைக்கப்பட்டுள்ள சிறப்பு ஜெர்சியை அறிமுகப்படுத்தியுள்ளார். அர்ஜென்டினா மற்றும் பெனின் அணிகளுக்கு…

19 0 0
விளையாட்டுச் செய்திகள்

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி : இலங்கையை வீழ்த்தியது இங்கிலாந்து

இலங்கை அணிக்கு எதிராக செஸ்டர்-லீ-ஸ்ட்ரீட்டில் நடைபெற்ற முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 89 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 266 ஓட்டங்கள்…

18 0 0
விளையாட்டுச் செய்திகள்

சென்னை சுப்பர் கிங்ஸ் அணியில் ஸஹீர் கானுக்கு புதிய பொறுப்பு!

2027 ஆம் ஆண்டு இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்) தொடருக்கு முன்னதாக, சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் புதிய தலைமை பயிற்றுவிப்பாளர் முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர்…

36 0 0