உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

இன்றைய ராசி பலன்கள் – 30.03.2026

ராசி பலன்கள் 6 மாதங்கள் முன்
59 பார்வைகள்

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சோம்பேறித்தனம் இருக்கும். உடல் அசதி இருக்கும். ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. கவனமாக இருக்க வேண்டும். நிறைய தண்ணீர் குடியுங்கள். வெயில் நேரத்தில் வெளியில் செல்லாமல் இருப்பது நல்லது. கூடுமானவரை இன்று தேவையான அளவு ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள். அலைச்சல் வேண்டாம்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று முன் கோபத்தால் சின்னச் சின்ன பிரச்சினைகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. உங்களுடைய நல்ல வேலை, நல்ல நண்பர்கள், நல்ல வியாபாரம் சம்பந்தப்பட்ட விஷயங்களை கூட இழக்கும் சூழ்நிலை வரலாம். கவனமாக இருங்கள். எந்த இடத்திலும் கோபப்பட்டு பேசாதீர்கள். நிதானமாக இருந்தால் மட்டும் இந்த நாள் இனிய நாளாக இருக்கும்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று வருமானம் நிறைந்த நாளாக இருக்கும். மாதக் கடைசியில் இருக்கும் நிதி நிலைமையை சமாளிக்க தக்க சமயத்தில், மகாலட்சுமி உதவி செய்துவிடுவாள். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். சேமிப்பை உயர்த்தலாம். வீட்டின் தேவையை பூர்த்தி செய்வீர்கள்.

கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்று நட்பு ரீதியாக நிறைய நல்லது நடக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் முன்னேற்றம் இருக்கும். சுறுசுறுப்பு இருக்கும். நேரத்தை மட்டும் வீணாக்காதீர்கள். கோபத்தை கொஞ்சம் குறைத்துக் கொள்ளுங்கள். உணர்ச்சி வசப்படுவதை குறைத்துக் கொள்ளுங்கள். நிச்சயமாக நல்லது நடக்கும்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று நலமான நாளாக இருக்கும். ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சினைகள் விலகும். உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். முதியவர்களுக்கு மனதில் மகிழ்ச்சி வெளிப்படும். குடும்ப ஒற்றுமை இருக்கும். நீண்ட தூர பயணங்கள் நல்லபடியாக அமையும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் இருக்கும்.

கன்னி
கன்னி ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று நன்மைகள் அதிகரிக்கும் நாளாக இருக்கும். பெரிய பெரிய பிரச்சினைகள் எல்லாம் கூட, சுலபமாக முடிந்த விடும். உங்களுடைய பேச்சுத் திறமை வெளிப்படும். அழகான தோற்றம் அனைவரையும் வசீகரிக்கும். வீட்டில் சுபகாரிய தடைகள் விலகும். காதல் கைகூடும் திருமணம் வரை செல்லும்.

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று புதிய முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். சுறுசுறுப்பு இருக்கும். கணவன் மனைவிக்குள் இருந்து வந்த வாக்குவாதம் விலகும். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். நீங்கள் செய்த சின்னச் சின்ன தவறை கூட எண்ணி வருத்தப்படுவீர்கள். செய்த தவறுக்கு மனதார மன்னிப்பும் கேட்பீர்கள். இரவு நல்ல தூக்கம் கிடைக்கும்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று துணிச்சல் வெளிப்படும். எல்லா விஷயத்திலும் துடிப்போடு நடந்து கொள்வீர்கள். வேகத்தை விட விவேகம் தான் அதிகமாக இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் இருந்து வந்த எதிரி பிரச்சினைகள் விலகும். மனதில் பட்டதை வெளிப்படையாக பேசி, பிரச்சினைக்கு உடனடியாக முடிவு கட்டுவீர்கள்.

தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷம் நிறைந்த நாளாக இருக்கும். வீட்டில் விருந்தாளிகளின் வருகை இருக்கும். நீண்ட நேரம் பிரிந்த உறவுகளோடு பேசி நேரத்தை செலவு செய்வீர்கள். மனதில் பட்ட விஷயங்களை வெளிப்படையாக பேசி விடுவீர்கள். நீண்ட நாள் ஆசை கனவு நிறைவேறும். மனதிற்கு பிடித்த நபரை கைபிடிக்கவும் வாய்ப்புகள் உள்ளது.

மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று மனநிறைவான நாளாக இருக்கும். ஆன்மீகத்தில் மனது ஈடுபடும். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு நல்ல பெயர் கிடைக்கும். பெரியவர்களின் ஆசிர்வாதத்தால் சந்தோஷம் இரட்டிப்பாகும். உங்களுடைய கடமையிலிருந்து தவறாமல் நடந்து கொள்வீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் சுமூகமான போக்கு நிலவும்.

கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் மன கவலை இருக்கும். கொஞ்சம் டென்ஷன் அதிகரிக்கும். முன்கோபம் வேண்டாம். நிதானமாக சிந்தித்து செயல்படுங்கள். ஒரு துளி கூட அவசரம் இருக்கக் கூடாது. மனதை அமைதியாக வைத்துக் கொள்ள வேண்டும். கூடுமானவரை காலையில் 10 நிமிடம் கண்களை மூடி தியானம் செய்வது நல்லது. வாழ்க்கை துணை பேச்சை கேட்பது நல்லது.

மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று மன அமைதியான நாளாக இருக்கும். டென்ஷன் குறையும். வேலை, வியாபாரத்தில் சுறுசுறுப்பு இருக்கும். கடமைகளை சரியாக செய்து முடிப்பீர்கள். பிள்ளைகளுடைய நலனில் அக்கறை காட்டுவீர்கள். வாகனங்களை ஓட்டும்போது கவனம் தேவை. கைபேசி பார்ப்பதை குறைத்துக் கொள்வது நல்லது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 06.10.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சுறுசுறுப்பு தேவை. சோம்பேறித்தனத்தை விட்டு விடுங்கள். கடமையில் கவனமாக செயல்படுங்கள். இன்று முருகர் வழிபாடு செய்து, பிறகு முக்கியமான வேலைகளை செய்ய…

64 0 0
ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 05.10.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்கள் இன்று வேலையில் முழு கவனத்தோடு செயல்பட வேண்டும். சின்னச் சின்ன சிரமங்கள் வந்தாலும் அதை எதிர்கொள்ள கூடிய மனப்பக்குவம் தேவை. தோல்விகளை கண்டு துவண்டு…

59 0 0
ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 03.10.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சோர்வான நாளாக தான் இருக்கும். மனம் கவலையாக இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் முழுசாக கவனம் செலுத்த முடியாத சூழ்நிலை இருக்கும். இதனால்…

86 0 0
ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 02.10.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று இலாபமான நாளாக இருக்கும். வியாபாரத்தில் புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். புதிய முதலீடுகளுக்கு முயற்சி செய்யலாம். வேலையில் எதிர்பார்த்ததை விட முன்னேற்றம் கொஞ்சம் குறைவாக…

99 0 0