உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

காட்டு யானை உயிரிழந்தமை தொடர்பாக விசாரணை.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
40 பார்வைகள்

காட்டு யானை உயிரிழந்தமை தொடர்பாக விசாரணை முன்னெடுக்கப்படவுள்ளது.

அம்பாறை மாவட்டம் காரைதீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவடிப்பள்ளி வயல் பகுதியில் காட்டு யானை ஒன்றின் சடலம் நேற்று (25) மீட்கப்பட்டிருந்தது.

குறித்த காட்டு யானை உட்பட சில யானைகள் அப்பகுதிகளில் குப்பைகளை உண்பதற்காக நடமாடி திரிந்த நிலையில் கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றிற்கமைய பொலிஸ் அதிகாரிகள் சம்பவ இடத்தை பார்வையிட்டு வளத்தாப்பிட்டி வனஜீவராசிகள் திணைக்கள அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

12 வயதுடைய குறித்த பெண் யானையின் சடலம் கண்டெடுக்கப்பட்ட இடத்திற்கு வளத்தாப்பிட்டி வனஜீவராசிகள் திணைக்கள பாதுகாப்புப் பொறுப்பாளரான அஜித் குணரத்ன உள்ளிட்ட குழுவினர் சென்று ஆய்வு செய்தனர்.

இவ்விடயம் தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் யானையின் உடலை மீட்டுள்ளதுடன் யானை உயிரிழந்தமைக்கான காரணம் பற்றிய மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். அத்துடன் குறித்த யானை மீதான பிரேத பரிசோதனை தொடர்பில் அம்பாறை வனவிலங்கு சுகாதாரப் பிரிவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் இன்று (26) இடம்பெறவுள்ள பிரேத பரிசோதனையில் யானை இறப்பிற்கான காரணம் கண்டறியப்பட உள்ளதுடன் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளும் காரைதீவு பொலிஸாரும் இணைந்து தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அண்மைக்காலமாக இப்பகுதிகளில் நூற்றுக்கணக்கான யானைகள் வருகை தந்த வண்ணம் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மல்வத்து, அஸ்கிரி மகாநாயக்க தேரர்களை சந்தித்து ஆசி பெற்ற ஜனாதிபதி அநுரகுமார.!

கண்டி வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகையின் வருடாந்த எசல பெரஹரா விழாவில் கலந்துகொள்வதற்காக கண்டிக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, நேற்று வியாழக்கிழமை மல்வத்து…

47 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்த விவகாரம்; நீதிமன்றத்துக்கு அப்பால் செயற்பட அரசு தயார்.!

அரசமைப்பின் 22ஆவது திருத்தம் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வெளியிட்டுள்ள நிலைப்பாடு முற்றிலும் தவறானது என்றும், ஒருசில குறுகிய தரப்பினரது எதிர்ப்புகளுக்காக இத்தீர்மானத்தை மீளப்பெறப் போவதில்லை என…

53 0 0
இலங்கை செய்திகள்

நேபாள வெள்ளப்பெருக்கை அடுத்து இலங்கைக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.!

நேபாளம் மற்றும் திபெத் எல்லைப் பகுதியில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு, அப்பகுதியில் நிலநடுக்கம் மற்றும் பனிச்சரிவு காரணமாகவே உருவாகியுள்ளது என பேராதனைப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் முன்னாள்…

56 0 0
இலங்கை செய்திகள்

கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் வழிபாடு செய்தார் ஜனாதிபதி.!

ஸ்ரீ தலதா மாளிகையின் வருடாந்த எசல பெரஹரா விழாவை முன்னிட்டு கண்டிக்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, நேற்று பிற்பகல் வரலாற்று சிறப்புமிக்க தலதா மாளிகைக்கு…

53 0 0