உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

இன்றைய ராசி பலன்கள் – 26.03.2026

ராசி பலன்கள் 6 மாதங்கள் முன்
82 பார்வைகள்

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று வருமானம் நிறைந்த நாளாக இருக்கும். வராத கடன் வசூல் ஆகும். சேமிப்பு உயரும். சொத்து சுகம் வாங்குவதற்கும் வாய்ப்புகள் உள்ளது. வேலையிலும் வியாபாரத்திலும் திருப்தியான நிலை இருக்கும். ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். நிறைய தண்ணீர் குடியுங்கள். அதிக வெயில் சமயத்தில், வெளியே போக வேண்டாம்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று ஆசைகள் நிறைவேறும் நாளாக இருக்கும். நீண்ட நாள் நீங்கள் கண்ட கனவு இன்று பலிக்க போகிறது. மனதிற்கு பிடித்த விஷயங்கள் நடக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்து வந்த தடை விலகும். உயர் படிப்புகள் படிக்க நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றி தரும்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று நலமான நாளாக இருக்கும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். தேவையற்ற டென்ஷன் குறையும். வீட்டில் விருந்தாளிகளின் வருகை இருக்கும். நீண்ட நாள் பிரிந்த உறவுகளோடு பேசி நேரத்தை செலவு செய்வீர்கள். இதெல்லாம் நடந்தாலும் வேலையிலும் வியாபாரத்திலும் கவனம் இருக்க வேண்டும். கடமையிலிருந்து தவறக்கூடாது.

கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்று நல்லதே நடக்கும். புது நண்பர்களின் அறிமுகம் புதிய நம்பிக்கையை உண்டு பண்ணும். வேலையிலும் வியாபாரத்திலும் கொஞ்சம் மந்தமான போக்கு நிலவும். இருந்தாலும் பெரிதாக பிரச்சினைகள் வராது. ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். நேரத்தை வீணடிக்காதீர்கள். உயர் அதிகாரிகளோடு அனுசரித்து நடந்து கொள்ளுங்கள். இருக்கும் வேலையை தக்க வைத்துக் கொள்வது நல்லது.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று மன அமைதி இருக்கும். மனம் தெளிவாக இருக்கும். தெளிவாக சிந்திப்பீர்கள். வாழ்க்கைக்கு தேவையான முடிவுகளை தெளிவாக எடுப்பீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். குழப்பத்திலிருந்து விடுபட்டு பிரச்சினைகளுக்கு முடிவு காணும் நாள் இன்று.

கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று பெயர் புகழ் அந்தஸ்து உயரக்கூடிய நாளாக இருக்கும். நல்ல வாய்ப்புகள் வீடு தேடி வரும். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தை விரிவுபடுத்தலாம். புதிய முதலீடுகளுக்கு முயற்சி செய்யலாம். கணவன், மனைவி ஒற்றுமை அதிகரிக்கும். வருமானம் பெருகும் சேமிப்பு உயரும் நாள் இன்று.

துலாம்
துலாம் ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று சந்தோஷமான நாளாக இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் சுறுசுறுப்பு இருக்கும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். காதல் வெளிப்படும். திருமணம் வரை செல்லும். வீட்டில் சுப காரிய தடைகள் விலகும். நீண்ட தூர பயணத்தின் போது கவனம் இருக்கட்டும்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று இலாபம் நிறைந்த நாளாக இருக்கும். வருமானம் வீடு தேடி வரும். சேமிப்பு உயரும். கடன் சுமை குறையும். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் காணப்படும். மாணவர்கள் கல்வியில் கவனமாக இருக்க வேண்டும். தேவையில்லாத நட்பில் இருந்து விலகி இருப்பது நல்லது.

தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று முன்னேற்றம் நிறைந்த நாளாக இருக்கும். வாழ்க்கையில் உயர்ந்த இடத்திற்கு செல்ல நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றியைத் தரும். புது நண்பர்களின் வருகை மனதிற்கு சந்தோஷத்தை கொடுக்கும். புதுசாக காதல் மலர்வதற்கும் வாய்ப்பு உள்ளது. வாழ்க்கையில் நிறைய புதுப்புது அனுபவங்களை இன்று கற்றுக் கொள்வீர்கள்.

மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று ஆதரவு கிடைக்கும். பிரச்சினைகளுக்கு உண்டான தீர்வு கிடைக்கும். உங்கள் பேச்சுக்கு மரியாதை இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் இருந்து வந்து டென்ஷன் குறையும். நீண்ட நாள் பகையிலிருந்து விடுபடுவீர்கள். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். வெயில் நேரத்தில் வெளியில் செல்லாமல் இருப்பது நல்லது.

கும்பம்
கும்ப ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று சுகபோக வாழ்வு இருக்கும். நேரத்திற்கு சாப்பாடு, நேரத்திற்கு தூக்கம் என்று இந்த நாள் இனிய நாளாக அமையும். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். கணவன், மனைவிக்குள் வாக்குவாதம் செய்ய வேண்டாம். குடும்ப விஷயத்தில் மட்டும் விட்டுக் கொடுப்பது நல்லது.

மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று ஓய்வு எடுக்கும் நாளாக இருக்கும். வேலையில் சுறுசுறுப்பு இருக்கும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். எல்லா விஷயங்களும் நல்லபடியாக நடந்தாலும், உங்களுடைய தேவையற்ற பேச்சினால் பிரச்சினைகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. பேசுவதை குறைக்க வேண்டும் முன்கோபம் வேண்டாம்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 06.10.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சுறுசுறுப்பு தேவை. சோம்பேறித்தனத்தை விட்டு விடுங்கள். கடமையில் கவனமாக செயல்படுங்கள். இன்று முருகர் வழிபாடு செய்து, பிறகு முக்கியமான வேலைகளை செய்ய…

64 0 0
ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 05.10.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்கள் இன்று வேலையில் முழு கவனத்தோடு செயல்பட வேண்டும். சின்னச் சின்ன சிரமங்கள் வந்தாலும் அதை எதிர்கொள்ள கூடிய மனப்பக்குவம் தேவை. தோல்விகளை கண்டு துவண்டு…

59 0 0
ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 03.10.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சோர்வான நாளாக தான் இருக்கும். மனம் கவலையாக இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் முழுசாக கவனம் செலுத்த முடியாத சூழ்நிலை இருக்கும். இதனால்…

86 0 0
ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 02.10.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று இலாபமான நாளாக இருக்கும். வியாபாரத்தில் புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். புதிய முதலீடுகளுக்கு முயற்சி செய்யலாம். வேலையில் எதிர்பார்த்ததை விட முன்னேற்றம் கொஞ்சம் குறைவாக…

99 0 0