உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் இன்றுடன் ஓய்வு!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
34 பார்வைகள்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கணிதவியல் பேராசிரியர் சிவக்கொழுந்து சிறிசற்குணராஜா, கடந்த 2020 ஆம் ஆண்டிலிருந்து வகித்த துணைவேந்தர் பதவியில் இருந்து நேற்றைய தினம் விடைபெற்றுச் சென்றுள்ளார்.

2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 28 ஆம் திகதி முதல் 2023 ஆகஸ்ட் 28 வரை தனது முதலாவது பதவிக் காலத்தையும், 2023 ஆகஸ்ட் முதல் இன்று 2026 மார்ச் 24 வரை இரண்டாவது பதவிக் காலத்திலும் துணைவேந்தராகப் பதவி வகித்த பேராசிரியர் சிவக்கொழுந்து சிறிசற்குணராஜா, இன்றைய தினம் தனது 65 ஆவது அகவையை நிறைவு செய்து 66 ஆவது அகவைக்குள் காலடி பதிக்கிறார்.

எதிர்வரும் ஆகஸ்ட் 28 திகதி வரை ஜனாதிபதியினால் இவருக்கு நியமனம் வழங்கப்பட்டிருந்த போதிலும், பல்கலைக்கழக சட்டத்தின் படி 65 வயதை நிறைவுசெய்த பின்னர் நிர்வாகப் பதவிகளை வகிப்பதற்கு இடமளிக்காததன் காரணமாகப் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிடம் தானாகக் கேட்டு, அடுத்த துணைவேந்தருக்கான தெரிவை உரிய காலத்தினுள் நடாத்தி, புதிய துணைவேந்தரிடம் பதவியை கையளித்தார்.

எனினும், பல்கலைக்கழகச் சட்ட ஏற்பாடுகளின் படி,அவர் பணியாற்றும் விஞ்ஞான பீடத்தின் நடப்புக் கல்வியாண்டு நிறைவு பெறும் – எதிர்வரும் செப்டம்பர் 30 வரை அவர் தனது கல்விப் பணியில் தொடர்ந்தும் கணிதவியல் பேராசிரியராகச் சேவையாற்றுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மல்வத்து, அஸ்கிரி மகாநாயக்க தேரர்களை சந்தித்து ஆசி பெற்ற ஜனாதிபதி அநுரகுமார.!

கண்டி வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகையின் வருடாந்த எசல பெரஹரா விழாவில் கலந்துகொள்வதற்காக கண்டிக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, நேற்று வியாழக்கிழமை மல்வத்து…

47 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்த விவகாரம்; நீதிமன்றத்துக்கு அப்பால் செயற்பட அரசு தயார்.!

அரசமைப்பின் 22ஆவது திருத்தம் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வெளியிட்டுள்ள நிலைப்பாடு முற்றிலும் தவறானது என்றும், ஒருசில குறுகிய தரப்பினரது எதிர்ப்புகளுக்காக இத்தீர்மானத்தை மீளப்பெறப் போவதில்லை என…

53 0 0
இலங்கை செய்திகள்

நேபாள வெள்ளப்பெருக்கை அடுத்து இலங்கைக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.!

நேபாளம் மற்றும் திபெத் எல்லைப் பகுதியில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு, அப்பகுதியில் நிலநடுக்கம் மற்றும் பனிச்சரிவு காரணமாகவே உருவாகியுள்ளது என பேராதனைப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் முன்னாள்…

56 0 0
இலங்கை செய்திகள்

கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் வழிபாடு செய்தார் ஜனாதிபதி.!

ஸ்ரீ தலதா மாளிகையின் வருடாந்த எசல பெரஹரா விழாவை முன்னிட்டு கண்டிக்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, நேற்று பிற்பகல் வரலாற்று சிறப்புமிக்க தலதா மாளிகைக்கு…

53 0 0