உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

வறட்சியான வானிலையால் கோழிகள் இறப்பு – பண்ணை உரிமையாளர்கள்.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
38 பார்வைகள்

நிலவும் வறட்சியான வானிலை காரணமாக கோழிப் பண்ணைகளில் உள்ள கோழிகள் இறக்கின்றமை அதிகரித்துள்ளதாக கால்நடை பண்ணை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.இலங்கை கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் அஜித் எச் குணசேகர இதனை தெரிவித்துள்ளார்.

நிலவும் வெப்பநிலையைத் தாங்க முடியாது இறைச்சிக் கோழிகள் இறக்கின்றன.அத்துடன் கோழிகளால் இடப்படும் முட்டைகளின் எண்ணிக்கையும் தற்போது குறைந்துள்ளது.வெப்பநிலையைத் தாங்க முடியாததால் கோழிகள் முட்டையிடுவது சுமார் 20 சதவீதம் குறைந்துள்ளது.

25,000 முதல் 30,000 விலங்குகள் வரை உள்ள கூண்டுகள் ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையில் பராமரிக்கப்படுவதாகவும், ஒரு மணி நேரம் மின்சாரம் தடைபட்டால், மின் பிறப்பாக்கிகள் உடனடியாக இயக்கப்பட வேண்டும்.

மின்சார பிறப்பாக்கிகளை இயக்குவதற்கு தேவையான அளவு டீசல் எரிபொருளை வழங்குமாறு விவசாய அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக இலங்கை கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் அஜித் எச் குணசேகர தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மல்வத்து, அஸ்கிரி மகாநாயக்க தேரர்களை சந்தித்து ஆசி பெற்ற ஜனாதிபதி அநுரகுமார.!

கண்டி வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகையின் வருடாந்த எசல பெரஹரா விழாவில் கலந்துகொள்வதற்காக கண்டிக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, நேற்று வியாழக்கிழமை மல்வத்து…

47 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்த விவகாரம்; நீதிமன்றத்துக்கு அப்பால் செயற்பட அரசு தயார்.!

அரசமைப்பின் 22ஆவது திருத்தம் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வெளியிட்டுள்ள நிலைப்பாடு முற்றிலும் தவறானது என்றும், ஒருசில குறுகிய தரப்பினரது எதிர்ப்புகளுக்காக இத்தீர்மானத்தை மீளப்பெறப் போவதில்லை என…

53 0 0
இலங்கை செய்திகள்

நேபாள வெள்ளப்பெருக்கை அடுத்து இலங்கைக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.!

நேபாளம் மற்றும் திபெத் எல்லைப் பகுதியில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு, அப்பகுதியில் நிலநடுக்கம் மற்றும் பனிச்சரிவு காரணமாகவே உருவாகியுள்ளது என பேராதனைப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் முன்னாள்…

56 0 0
இலங்கை செய்திகள்

கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் வழிபாடு செய்தார் ஜனாதிபதி.!

ஸ்ரீ தலதா மாளிகையின் வருடாந்த எசல பெரஹரா விழாவை முன்னிட்டு கண்டிக்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, நேற்று பிற்பகல் வரலாற்று சிறப்புமிக்க தலதா மாளிகைக்கு…

53 0 0