உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

புதன்கிழமை விடுமுறையில் வகுப்பு நடத்திய ஆசிரியர்கள் – பொலிஸ் தலையீடு.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
48 பார்வைகள்

போர்ச் சூழலால் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாட்டை கருத்தில் கொண்டு, நாட்டின் எரிபொருள் கையிருப்பை முகாமைத்துவம் செய்வதற்காக புதன்கிழமைகளில் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ள நிலையில், அந்த விடுமுறை தினத்தில் மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட்ட சம்பவம் ஹட்டன் பகுதியில் பதிவாகியுள்ளது.


ஹட்டன் ஹிஜிராபுர பகுதியில் உள்ள திறந்தவெளி இடமொன்றில், அப்பகுதியின் பிரதான தமிழ் பாடசாலை ஒன்றைச் சேர்ந்த இரண்டு ஆசிரியர்கள் எந்தவித அடிப்படை வசதிகளும் இன்றி மாணவர்களுக்கு வகுப்புகளை நடத்தி வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.


இது தொடர்பாக பிரதேச மக்களிடமிருந்து கிடைத்த தகவலின் பேரில், ஹட்டன் தலைமையகப் பொலிஸ் பொறுப்பதிகாரி டபிள்யூ.ஆர்.ஏ.டி. சுகததாச சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டார்.அரசின் கல்வி அமைச்சின்சுற்றுநிருபங்களை ஆசிரியர்களுக்கு தெளிவுபடுத்திய பொலிஸார், உடனடியாக வகுப்புகளை நிறுத்துமாறு பணிப்புரை விடுத்து, மாணவர்களை வீடுகளுக்கு அனுப்பி வைத்தனர்.


புதன்கிழமைகளில் எந்தவிதமான பிரத்தியோக வகுப்புகளையும் நடத்தக்கூடாது என கல்வி அமைச்சு ஏற்கனவே கடுமையான சுற்றுநிருபம் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.மேலும், நுவரெலியா மாவட்டத்தின் பல பகுதிகளில் இவ்வாறான மேலதிக வகுப்புகள் நடைபெறுகின்றன என்ற தகவல்கள் கிடைத்துள்ளதாகவும், இனி இதுபோன்ற செயல்கள் தொடருமானால் தொடர்புடையவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மல்வத்து, அஸ்கிரி மகாநாயக்க தேரர்களை சந்தித்து ஆசி பெற்ற ஜனாதிபதி அநுரகுமார.!

கண்டி வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகையின் வருடாந்த எசல பெரஹரா விழாவில் கலந்துகொள்வதற்காக கண்டிக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, நேற்று வியாழக்கிழமை மல்வத்து…

47 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்த விவகாரம்; நீதிமன்றத்துக்கு அப்பால் செயற்பட அரசு தயார்.!

அரசமைப்பின் 22ஆவது திருத்தம் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வெளியிட்டுள்ள நிலைப்பாடு முற்றிலும் தவறானது என்றும், ஒருசில குறுகிய தரப்பினரது எதிர்ப்புகளுக்காக இத்தீர்மானத்தை மீளப்பெறப் போவதில்லை என…

53 0 0
இலங்கை செய்திகள்

நேபாள வெள்ளப்பெருக்கை அடுத்து இலங்கைக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.!

நேபாளம் மற்றும் திபெத் எல்லைப் பகுதியில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு, அப்பகுதியில் நிலநடுக்கம் மற்றும் பனிச்சரிவு காரணமாகவே உருவாகியுள்ளது என பேராதனைப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் முன்னாள்…

56 0 0
இலங்கை செய்திகள்

கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் வழிபாடு செய்தார் ஜனாதிபதி.!

ஸ்ரீ தலதா மாளிகையின் வருடாந்த எசல பெரஹரா விழாவை முன்னிட்டு கண்டிக்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, நேற்று பிற்பகல் வரலாற்று சிறப்புமிக்க தலதா மாளிகைக்கு…

53 0 0