உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

ஏப்ரல் முதல் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையம்.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
30 பார்வைகள்

கொழும்பின் முக்கிய போக்குவரத்து மையங்களில் ஒன்றான புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையம், விரிவான புதுப்பிப்பு பணிகளுக்குப் பின்னர் எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


பல ஆண்டுகளாக நிலவி வந்த பயணிகள் நெரிசல், வசதிகளின் பற்றாக்குறை மற்றும் கட்டமைப்பு சீர்கேடு போன்ற பிரச்சினைகளை தீர்க்கும் வகையில், இந்த நிலையம் முழுமையான மேம்படுத்தல் திட்டத்தின் கீழ் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தினசரி ஆயிரக்கணக்கான பயணிகள் பயன்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


புதிய திட்டத்தின் கீழ், பயணிகள் காத்திருப்பு பகுதிகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளதுடன், சுகாதார வசதிகளும் மேம்படுத்தப்பட்டுள்ளன. மேலும், பேருந்துகளின் வருகை மற்றும் புறப்பாட்டு நேரங்களைத் தெளிவாகக் காட்டும் டிஜிட்டல் தகவல் பலகைகள்நிறுவப்பட்டுள்ளன. பாதுகாப்பை வலுப்படுத்தும் வகையில் கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன.


அத்துடன், மாற்றுத்திறனாளிகளுக்கான அணுகல் வசதிகளும் மேம்படுத்தப்பட்டுள்ளதுடன், பயணிகள் வசதிக்காக உணவகங்கள், ஓய்வு இடங்கள் மற்றும் வணிக நிலையங்களும் புதிதாக அமைக்கப்பட்டுள்ளன.இந்தப் புதுப்பிப்பு திட்டம், கொழும்பு நகரின் போக்குவரத்து முகாமையை மேம்படுத்துவதுடன், நகரின் அடிப்படை வசதிகளை நவீனமயமாக்கும் அரசின் முயற்சியின் ஒரு பகுதியாகும்.


போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் தலைமையில், இலங்கை விமானப்படையின் ஒத்துழைப்புடன் இந்த அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சுமார் 424 மில்லியன் ரூபாய் செலவில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.


இந்தத் திட்டத்தின் கீழ், முதலாவது தளம் பேருந்து தரிப்பிடமாகவும், இரண்டாவது தளம் சாரதிகள் மற்றும்நடத்துனர்களுக்கான ஓய்வு அறைகளாகவும், மூன்றாவது தளம் நிர்வாக மற்றும் செயல்பாட்டு சேவைகளுக்காகவும் பயன்படுத்தப்படும்.


மேலும், அனைத்து வகையான போக்குவரத்து சேவைகள் குறித்த தகவல்களை பெறுவதற்கான தகவல் மையமும் அமைக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் மாதம் முதல் முழுமையாக செயல்படவுள்ள இந்த பேருந்து நிலையம், பொதுமக்களுக்கு சுலபமானதும் பாதுகாப்பானதுமான பயண அனுபவத்தை வழங்கும் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மல்வத்து, அஸ்கிரி மகாநாயக்க தேரர்களை சந்தித்து ஆசி பெற்ற ஜனாதிபதி அநுரகுமார.!

கண்டி வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகையின் வருடாந்த எசல பெரஹரா விழாவில் கலந்துகொள்வதற்காக கண்டிக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, நேற்று வியாழக்கிழமை மல்வத்து…

47 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்த விவகாரம்; நீதிமன்றத்துக்கு அப்பால் செயற்பட அரசு தயார்.!

அரசமைப்பின் 22ஆவது திருத்தம் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வெளியிட்டுள்ள நிலைப்பாடு முற்றிலும் தவறானது என்றும், ஒருசில குறுகிய தரப்பினரது எதிர்ப்புகளுக்காக இத்தீர்மானத்தை மீளப்பெறப் போவதில்லை என…

53 0 0
இலங்கை செய்திகள்

நேபாள வெள்ளப்பெருக்கை அடுத்து இலங்கைக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.!

நேபாளம் மற்றும் திபெத் எல்லைப் பகுதியில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு, அப்பகுதியில் நிலநடுக்கம் மற்றும் பனிச்சரிவு காரணமாகவே உருவாகியுள்ளது என பேராதனைப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் முன்னாள்…

56 0 0
இலங்கை செய்திகள்

கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் வழிபாடு செய்தார் ஜனாதிபதி.!

ஸ்ரீ தலதா மாளிகையின் வருடாந்த எசல பெரஹரா விழாவை முன்னிட்டு கண்டிக்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, நேற்று பிற்பகல் வரலாற்று சிறப்புமிக்க தலதா மாளிகைக்கு…

53 0 0