உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

மின்சாரக் கட்டண உயர்வுக்கு எதிராக போராட்டம் – பொதுஜன பெரமுன எச்சரிக்கை.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
34 பார்வைகள்

அரசின் முறையற்ற நிர்வாகம் மற்றும் ஊழல்களால் ஏற்பட்ட நட்டத்தை மக்களிடம் சுமத்த அனுமதிக்க முடியாது என்றும், மின்சாரக் கட்டணத்தை உயர்த்த முயன்றால் அதற்கு எதிராக மக்களைத் திரட்டி போராட்டம் முன்னெடுக்கப்படும் என்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எச்சரிக்கை விடுத்துள்ளது.


கொழும்பில் உள்ள கட்சித் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி. சானக்க, உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை குறைந்திருந்தபோதிலும், இலங்கையில் எரிபொருள் விலை முன்கூட்டியே உயர்த்தப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டினார்.

போர்ச் சூழலை காரணம் காட்டி 20 நாட்கள் வரை விலை மனு கோரப்படாததால், தனியார் நிறுவனங்களை விட ஒரு லீற்றர் எரிபொருளுக்கு 80 ரூபா அதிகமாக அரசு செலுத்தியுள்ளதாகவும், இதனால் மக்களுக்கு கிடைக்க வேண்டிய இலாபம் பறிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.


மேலும், நிலக்கரி கொள்வனவில் இடம்பெற்ற ஊழலால் 150 மெகாவாட் மின்சார இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், அந்த இழப்பை ஈடுகட்ட நாட்டிலுள்ள சுமார் 60 இலட்சம் வீடுகளில் தலா மூன்று மின்விளக்குகள் வீதம் மொத்தம் 1.8 கோடி விளக்குகளை ஒரு நாள் முழுவதும் அணைக்க வேண்டிய நிலை உருவாகும் என சுட்டிக்காட்டினார்.


இவ்வாறான ஊழல்களால் ஏற்படும் நட்டத்தை மக்களிடம் சுமத்தாமல், அதற்குப் பொறுப்பானவர்களிடமிருந்தே அரசு மீட்டெடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.அரசின் நிர்வாகத் திறமையின்மையை மறைக்க மின்சாரக் கட்டணத்தை உயர்த்தும் முயற்சி எடுக்கப்பட்டால், அதற்கு எதிராக பாரிய மக்கள்போராட்டங்களை முன்னெடுக்கத் தயார் எனவும் டி.வி. சானக்க தெரிவித்தார்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மல்வத்து, அஸ்கிரி மகாநாயக்க தேரர்களை சந்தித்து ஆசி பெற்ற ஜனாதிபதி அநுரகுமார.!

கண்டி வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகையின் வருடாந்த எசல பெரஹரா விழாவில் கலந்துகொள்வதற்காக கண்டிக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, நேற்று வியாழக்கிழமை மல்வத்து…

47 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்த விவகாரம்; நீதிமன்றத்துக்கு அப்பால் செயற்பட அரசு தயார்.!

அரசமைப்பின் 22ஆவது திருத்தம் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வெளியிட்டுள்ள நிலைப்பாடு முற்றிலும் தவறானது என்றும், ஒருசில குறுகிய தரப்பினரது எதிர்ப்புகளுக்காக இத்தீர்மானத்தை மீளப்பெறப் போவதில்லை என…

53 0 0
இலங்கை செய்திகள்

நேபாள வெள்ளப்பெருக்கை அடுத்து இலங்கைக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.!

நேபாளம் மற்றும் திபெத் எல்லைப் பகுதியில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு, அப்பகுதியில் நிலநடுக்கம் மற்றும் பனிச்சரிவு காரணமாகவே உருவாகியுள்ளது என பேராதனைப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் முன்னாள்…

56 0 0
இலங்கை செய்திகள்

கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் வழிபாடு செய்தார் ஜனாதிபதி.!

ஸ்ரீ தலதா மாளிகையின் வருடாந்த எசல பெரஹரா விழாவை முன்னிட்டு கண்டிக்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, நேற்று பிற்பகல் வரலாற்று சிறப்புமிக்க தலதா மாளிகைக்கு…

53 0 0