உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

பராட்டே சட்டம் உடனடியாக இடைநிறுத்தப்பட வேண்டும் – சஜித் பிரேமதாச வலியுறுத்தல்.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
32 பார்வைகள்

பராட்டே சட்டத்தின் அமுலாக்கத்தை உடனடியாக இடைநிறுத்த வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்.கொழும்பில் இன்று (25) நுண், சிறிய மற்றும் நடுத்தர தொழில்முனைவோருடன் நடைபெற்ற சந்திப்பின் பின்னர் கருத்து வெளியிட்ட அவர், எரிபொருள் விலைகள் திடீரென அதிகரித்துள்ளதால் நாட்டின் பொருளாதாரத்தில் 52 சதவீதம் பங்களிப்பு வழங்கும் இத்துறை கடுமையான சிரமங்களை எதிர்கொண்டு வருவதாக குறிப்பிட்டார்.


இந்த விலை உயர்வு உற்பத்தி செயல்முறை, தேவை மற்றும் விநியோக சங்கிலி ஆகியவற்றில் தீவிரமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், நுண், சிறிய மற்றும் நடுத்தர தொழில்முனைவோர் 45 இலட்சத்திற்கும் அதிகமானவர்களுக்கு வேலைவாய்ப்பையும் பல குடும்பங்களுக்கு வாழ்வாதாரத்தையும் வழங்கி வருவதாகவும் சுட்டிக்காட்டினார்.


இந்தத் துறை பாதிக்கப்பட்டால் நாட்டின்பொருளாதார வளர்ச்சி கடுமையாக பாதிக்கப்படும் என எச்சரித்த அவர், தற்போதைய அரசாங்கம் உடனடியாக தலையிட்டு தேவையான ஆதரவு மற்றும் பாதுகாப்பை வழங்க வேண்டும் என வலியுறுத்தினார்.


2019 ஆம் ஆண்டிலிருந்து பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்டு வீழ்ச்சி கண்டுள்ள இத்துறையை மீண்டும் எழச் செய்வதற்கான நடவடிக்கைகள் அவசியம் எனவும் அவர் குறிப்பிட்டார்.


இதன் காரணமாக, பராட்டே சட்டத்தின் அமுலாக்கத்தை உடனடியாக இடைநிறுத்தி, தொழில்முனைவோரின் கடன்களை மறுசீரமைத்து அவர்கள் மீளச் செலுத்தக்கூடிய சூழலை உருவாக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மல்வத்து, அஸ்கிரி மகாநாயக்க தேரர்களை சந்தித்து ஆசி பெற்ற ஜனாதிபதி அநுரகுமார.!

கண்டி வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகையின் வருடாந்த எசல பெரஹரா விழாவில் கலந்துகொள்வதற்காக கண்டிக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, நேற்று வியாழக்கிழமை மல்வத்து…

47 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்த விவகாரம்; நீதிமன்றத்துக்கு அப்பால் செயற்பட அரசு தயார்.!

அரசமைப்பின் 22ஆவது திருத்தம் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வெளியிட்டுள்ள நிலைப்பாடு முற்றிலும் தவறானது என்றும், ஒருசில குறுகிய தரப்பினரது எதிர்ப்புகளுக்காக இத்தீர்மானத்தை மீளப்பெறப் போவதில்லை என…

53 0 0
இலங்கை செய்திகள்

நேபாள வெள்ளப்பெருக்கை அடுத்து இலங்கைக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.!

நேபாளம் மற்றும் திபெத் எல்லைப் பகுதியில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு, அப்பகுதியில் நிலநடுக்கம் மற்றும் பனிச்சரிவு காரணமாகவே உருவாகியுள்ளது என பேராதனைப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் முன்னாள்…

56 0 0
இலங்கை செய்திகள்

கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் வழிபாடு செய்தார் ஜனாதிபதி.!

ஸ்ரீ தலதா மாளிகையின் வருடாந்த எசல பெரஹரா விழாவை முன்னிட்டு கண்டிக்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, நேற்று பிற்பகல் வரலாற்று சிறப்புமிக்க தலதா மாளிகைக்கு…

53 0 0