உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

எரிபொருளை பதுக்கி வைத்திருந்தவர் கைது.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
32 பார்வைகள்

அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமான முறையில் பெருமளவிலான எரிபொருளைச் சேமித்து வைத்திருந்த நபர் ஒருவர் மொரகஹஹேன, கோனபொல பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் கோனபொல பகுதியைச் சேர்ந்த 46 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

வலான ஊழல் ஒழிப்பு பிரிவின் அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து முன்னெடுக்கப்பட்ட இந்தச் சோதனையின் போது, சந்தேகநபரின் வீட்டின் வளவினுள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த எரிபொருள் பௌசர் ஒன்று சோதனையிடப்பட்டது.

இதன்போது, பாணந்துறை பகுதியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றுக்குச் சொந்தமானது எனக் கூறப்படும் அந்தப் பௌசருக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 6,600 லீற்றர் டீசல் கைப்பற்றப்பட்டது.

அத்தோடு, குறித்த சந்தேகநபரின் வீட்டிற்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 152 லீற்றர் டீசல் அடங்கிய ஒரு பீப்பாய், 120 லீற்றர் பெற்றோல் அடங்கிய ஒரு பீப்பாய் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலும், சம்பவம் தொடர்பில் மொரகஹஹேன பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் வழிபாடு செய்தார் ஜனாதிபதி.!

ஸ்ரீ தலதா மாளிகையின் வருடாந்த எசல பெரஹரா விழாவை முன்னிட்டு கண்டிக்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, நேற்று பிற்பகல் வரலாற்று சிறப்புமிக்க தலதா மாளிகைக்கு…

48 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தம் குறித்து ஜனாதிபதி வெளியிட்ட கருத்துகள் முற்றிலும் தவறானவை.!

அரசமைப்பின் 22ஆவது திருத்தம் தொடர்பாக ஜனாதிபதி வெளியிட்ட கருத்துகள் முற்றிலும் தவறானவை என்றும், அவர் இந்த நாட்டின் உரிமையாளர் அல்ல, மாறாக மக்களின் பிரதிநிதி மாத்திரமே என்பதை…

45 0 0
இலங்கை செய்திகள்

உடலுக்குள் மறைத்து தங்கம் கடத்த முயன்றவர்களுக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு.!

இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு உடலுக்குள் மறைத்துத் தங்கம் கடத்த முயன்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 11 பேரையும் எதிர்வரும் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிவான்…

37 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தத்தால் ஊழல் வழக்குகளை விரைவுபடுத்த முடியாது.!

முன்வைக்கப்பட்டுள்ள 22ஆவது அரசமைப்பு திருத்த யோசனையின் மூலம் ஊழல் வழக்குகளை ஒருபோதும் விரைவுபடுத்த முடியாது என்றும், அரசு கூறிவரும் கருத்துக்கள் முற்றிலும் பொய் என்பது இதன் மூலம்…

33 0 0