உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

ஹட்டன் டிக்கோயா நகர சபையில் பதற்றம்; முன்னாள் தலைவர் வெளிநடப்பு.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
35 பார்வைகள்

ஹட்டன் டிக்கோயா நகர சபையில் நேற்று (மார்ச் 24) நடைபெற்ற சபை அமர்வின் போது கடும் பதற்ற நிலை ஏற்பட்டது. நகர சபைத் தலைவர் அசோக கருணாரத்ன அவர்களின் தலைமையில் நடைபெற்ற இவ்வமர்வில், நகர சபை உறுப்பினரும் முன்னாள் தலைவருமான அழகுமுத்து நந்தகுமார் சபை நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தார்.

மக்கள் பிரச்சினைகள் குறித்து கடும் குற்றச்சாட்டு.

8சபை அமர்வின் போது உரையாற்றிய உறுப்பினர் அழகுமுத்து நந்தகுமார்,

கடந்த 9 மாதங்களாக மக்கள் முன்வைத்த பிரச்சினைகள் தீர்க்கப்படாமை.

குறிப்பாக குடிநீர் தட்டுப்பாடு மற்றும் குப்பை மேலாண்மை பிரச்சினைகளில் அதிகாரிகள் அலட்சியம் காட்டுவது,
என கடுமையாக குற்றம்சாட்டினார்.

வார்த்தைப் பிரயோகம் சர்ச்சை
இந்நேரத்தில் அவர் பயன்படுத்திய வார்த்தைகள் சபையில் இருந்த பிற உறுப்பினர்களின் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியது. இதனால் சபையில் பரபரப்பு நிலை உருவானது.

முன்னாள் தலைவர் அழகுமுத்து நந்தகுமார் சபையிலிருந்து வெளியேறிய பின்னரும், தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்கள்,
“சபை அமர்வில் இவ்வாறான தரக்குறைவான வார்த்தைகள் பயன்படுத்தப்படுவது ஏற்க முடியாதது” என்று கண்டனம் வெளியிட்டனர்.

வெளிநடப்பு
“பயனற்ற சபை அமர்வுகளில் கலந்து கொண்டு நேரத்தை வீணாக்குவதை விட, என் தனிப்பட்ட பணிகளை கவனிப்பது சிறந்தது” என தெரிவித்து உறுப்பினரும் முன்னாள் தலைவருமான அழகுமுத்து நந்தகுமார் சபையை புறக்கணித்து வெளியேறினார்.

இந்த சம்பவம் ஹட்டன் டிக்கோயா நகர சபையின் செயற்பாடுகள் குறித்து புதிய விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.

அத்துடன் நகர சபை ஊழியர்கள், உத்தியோகத்தர்களின் செயற்பாடுகளும் மந்த கதியில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் வழிபாடு செய்தார் ஜனாதிபதி.!

ஸ்ரீ தலதா மாளிகையின் வருடாந்த எசல பெரஹரா விழாவை முன்னிட்டு கண்டிக்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, நேற்று பிற்பகல் வரலாற்று சிறப்புமிக்க தலதா மாளிகைக்கு…

48 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தம் குறித்து ஜனாதிபதி வெளியிட்ட கருத்துகள் முற்றிலும் தவறானவை.!

அரசமைப்பின் 22ஆவது திருத்தம் தொடர்பாக ஜனாதிபதி வெளியிட்ட கருத்துகள் முற்றிலும் தவறானவை என்றும், அவர் இந்த நாட்டின் உரிமையாளர் அல்ல, மாறாக மக்களின் பிரதிநிதி மாத்திரமே என்பதை…

45 0 0
இலங்கை செய்திகள்

உடலுக்குள் மறைத்து தங்கம் கடத்த முயன்றவர்களுக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு.!

இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு உடலுக்குள் மறைத்துத் தங்கம் கடத்த முயன்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 11 பேரையும் எதிர்வரும் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிவான்…

37 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தத்தால் ஊழல் வழக்குகளை விரைவுபடுத்த முடியாது.!

முன்வைக்கப்பட்டுள்ள 22ஆவது அரசமைப்பு திருத்த யோசனையின் மூலம் ஊழல் வழக்குகளை ஒருபோதும் விரைவுபடுத்த முடியாது என்றும், அரசு கூறிவரும் கருத்துக்கள் முற்றிலும் பொய் என்பது இதன் மூலம்…

33 0 0