உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

மனைவி, மாமியார் மீது தாக்குதல்; என்.பி.பி. பிரதேச சபை உறுப்பினர் கைது.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
32 பார்வைகள்

தனது மனைவி மற்றும் அவரது தாயார் (மாமியார்) மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டின் கீழ், கெலன்பிந்துனுவெவ பிரதேச சபையின் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் ஒருவர் மொரகொட பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குடும்பத் தகராறு முற்றியதன் காரணமாகவே இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது என்று பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மேற்படி பிரதேச சபை உறுப்பினர் தனது மனைவியையும், இடையில் தடுக்க வந்த மாமியாரையும் கடுமையாகத் தாக்கியுள்ளார்.

தாக்குதலுக்குள்ளான இருவரும் படுகாயமடைந்த நிலையில், சிகிச்சைக்காக முதலில் கெலன்பிந்துனுவெவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

அவர்களது நிலைமையைக் கருத்திற்கொண்டு, மேலதிக சிகிச்சைக்காக தற்போது அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மொரகொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன், சந்தேகநபரான பிரதேச சபை உறுப்பினரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் வழிபாடு செய்தார் ஜனாதிபதி.!

ஸ்ரீ தலதா மாளிகையின் வருடாந்த எசல பெரஹரா விழாவை முன்னிட்டு கண்டிக்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, நேற்று பிற்பகல் வரலாற்று சிறப்புமிக்க தலதா மாளிகைக்கு…

48 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தம் குறித்து ஜனாதிபதி வெளியிட்ட கருத்துகள் முற்றிலும் தவறானவை.!

அரசமைப்பின் 22ஆவது திருத்தம் தொடர்பாக ஜனாதிபதி வெளியிட்ட கருத்துகள் முற்றிலும் தவறானவை என்றும், அவர் இந்த நாட்டின் உரிமையாளர் அல்ல, மாறாக மக்களின் பிரதிநிதி மாத்திரமே என்பதை…

45 0 0
இலங்கை செய்திகள்

உடலுக்குள் மறைத்து தங்கம் கடத்த முயன்றவர்களுக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு.!

இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு உடலுக்குள் மறைத்துத் தங்கம் கடத்த முயன்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 11 பேரையும் எதிர்வரும் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிவான்…

37 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தத்தால் ஊழல் வழக்குகளை விரைவுபடுத்த முடியாது.!

முன்வைக்கப்பட்டுள்ள 22ஆவது அரசமைப்பு திருத்த யோசனையின் மூலம் ஊழல் வழக்குகளை ஒருபோதும் விரைவுபடுத்த முடியாது என்றும், அரசு கூறிவரும் கருத்துக்கள் முற்றிலும் பொய் என்பது இதன் மூலம்…

33 0 0