உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

வைத்தியரின் வீட்டில் கொள்ளை; அங்கொட ரோசி தலைமையிலான கும்பல் சிக்கியது.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
33 பார்வைகள்

தேசிய கண் வைத்தியசாலையின் வைத்தியர் ஒருவரின் வீட்டை உடைத்து, வைத்திய உபகரணங்கள் உள்ளிட்ட பொருட்களைக் கொள்ளையடித்த ‘அங்கொட ரோசி’ தலைமையிலான மூவர் அடங்கிய கும்பலை முல்லேரியா பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடமிருந்து ஐஸ் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளது.

சந்தேகநபர்களைத் தடுப்புக்காவலில் வைத்துப் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தக் கொள்ளைக் கும்பலை 27 வயதுடைய ‘அங்கொட ரோசி’ என அழைக்கப்படும் பெண்ணே வழிநடத்தியுள்ளமை தெரியவந்துள்ளது.

இவர் ஐஸ் போதைப்பொருளுக்குக் கடுமையாக அடிமையானவர் எனப் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இக்கும்பலிடம் நடத்தப்பட்ட விசாரணையில், நவகமுவ, கடுவலை மற்றும் அங்கொட ஆகிய பொலிஸ் பிரிவுகளுக்குட்பட்ட பகுதிகளில் நான்கு மோட்டார் சைக்கிள்களைத் திருடி விற்பனை செய்துள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளது.

திருடப்பட்ட நான்கு மோட்டார் சைக்கிள்களில் இரண்டு, அங்கொட பகுதியிலுள்ள பாழ் நிலம் ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.

கடந்த 16 ஆம் திகதி முல்லேரியா பகுதியில் சந்தேகநபர் ஒருவர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட தீவிர விசாரணையின் மூலமே, அங்கொட ரோசி மற்றும் அவரது கும்பல் குறித்த இரகசியத் தகவல்கள் பொலிஸாருக்குக் கிடைத்துள்ளன.

இச்சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை முல்லேரியா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் வழிபாடு செய்தார் ஜனாதிபதி.!

ஸ்ரீ தலதா மாளிகையின் வருடாந்த எசல பெரஹரா விழாவை முன்னிட்டு கண்டிக்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, நேற்று பிற்பகல் வரலாற்று சிறப்புமிக்க தலதா மாளிகைக்கு…

48 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தம் குறித்து ஜனாதிபதி வெளியிட்ட கருத்துகள் முற்றிலும் தவறானவை.!

அரசமைப்பின் 22ஆவது திருத்தம் தொடர்பாக ஜனாதிபதி வெளியிட்ட கருத்துகள் முற்றிலும் தவறானவை என்றும், அவர் இந்த நாட்டின் உரிமையாளர் அல்ல, மாறாக மக்களின் பிரதிநிதி மாத்திரமே என்பதை…

45 0 0
இலங்கை செய்திகள்

உடலுக்குள் மறைத்து தங்கம் கடத்த முயன்றவர்களுக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு.!

இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு உடலுக்குள் மறைத்துத் தங்கம் கடத்த முயன்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 11 பேரையும் எதிர்வரும் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிவான்…

37 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தத்தால் ஊழல் வழக்குகளை விரைவுபடுத்த முடியாது.!

முன்வைக்கப்பட்டுள்ள 22ஆவது அரசமைப்பு திருத்த யோசனையின் மூலம் ஊழல் வழக்குகளை ஒருபோதும் விரைவுபடுத்த முடியாது என்றும், அரசு கூறிவரும் கருத்துக்கள் முற்றிலும் பொய் என்பது இதன் மூலம்…

33 0 0