உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

சந்தேகநபரை துரத்திச் சென்ற பொலிஸ் கொஸ்தாபல்; ரவைகளுடன் கூடிய துப்பாக்கிப் பாகம் மாயம்.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
35 பார்வைகள்

கொழும்பு, கொள்ளுப்பிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சந்தேகநபர் ஒருவரைத் துரத்திச் சென்ற பொலிஸ் கொஸ்தாபல் ஒருவரிடமிருந்த 10 ரவைகள் அடங்கிய கைத்துப்பாக்கியின் மகசின் காணாமல்போயுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் மற்றும் இரண்டு கொஸ்தாபல்கள் நேற்றுமுன்தினம் இரவு கொள்ளுப்பிட்டி சந்தியிலிருந்து காலிமுகத்திடல் சுற்றுவட்டம் வரை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். இதன்போது, பொலிஸ் சார்ஜன்ட் மற்றும் ஒரு கொஸ்தாபல் வசம் இரண்டு கைத்துப்பாக்கிகள் மற்றும் தலா இரண்டு மகசின்கள் வழங்கப்பட்டிருந்தன.

ரோந்துப் பணியின் போது, காலிமுகத்திடல் பகுதியில் சந்தேகத்துக்கிடமான முறையில் நடமாடிய ஒருவரை நிறுத்தி பொலிஸார் விசாரணை செய்துள்ளனர். அவரது அடையாள அட்டையை வினவியபோது, அந்த நபர் திடீரென பொலிஸாரிடமிருந்து தப்பியோடியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து பொலிஸ் அதிகாரிகள் அந்த நபரைத் துரத்திச் சென்ற போதிலும், அவரைப் பிடிக்க முடியவில்லை. மீண்டும் தமது கடமை இடத்துக்குத் திரும்பியபோது, ஒரு கொஸ்தாபல் தனது கைத்துப்பாக்கியுடன் இணைக்கப்பட்டிருந்த 10 ரவைகளைக் கொண்ட மகசின் காணாமல்போயுள்ளதை அவதானித்துள்ளார்.

சந்தேகநபரைத் துரத்திச் சென்ற வேகத்தில் அல்லது அந்தப் பகுதியில் ஏற்பட்ட தள்ளுமுள்ளுவின் போது இந்த மகசின் தவறி விழுந்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகின்றது. மாயமான துப்பாக்கிப் பாகத்தையும் ரவைகளையும் கண்டறியக் கொள்ளுப்பிட்டி பொலிஸார் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் வழிபாடு செய்தார் ஜனாதிபதி.!

ஸ்ரீ தலதா மாளிகையின் வருடாந்த எசல பெரஹரா விழாவை முன்னிட்டு கண்டிக்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, நேற்று பிற்பகல் வரலாற்று சிறப்புமிக்க தலதா மாளிகைக்கு…

48 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தம் குறித்து ஜனாதிபதி வெளியிட்ட கருத்துகள் முற்றிலும் தவறானவை.!

அரசமைப்பின் 22ஆவது திருத்தம் தொடர்பாக ஜனாதிபதி வெளியிட்ட கருத்துகள் முற்றிலும் தவறானவை என்றும், அவர் இந்த நாட்டின் உரிமையாளர் அல்ல, மாறாக மக்களின் பிரதிநிதி மாத்திரமே என்பதை…

45 0 0
இலங்கை செய்திகள்

உடலுக்குள் மறைத்து தங்கம் கடத்த முயன்றவர்களுக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு.!

இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு உடலுக்குள் மறைத்துத் தங்கம் கடத்த முயன்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 11 பேரையும் எதிர்வரும் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிவான்…

37 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தத்தால் ஊழல் வழக்குகளை விரைவுபடுத்த முடியாது.!

முன்வைக்கப்பட்டுள்ள 22ஆவது அரசமைப்பு திருத்த யோசனையின் மூலம் ஊழல் வழக்குகளை ஒருபோதும் விரைவுபடுத்த முடியாது என்றும், அரசு கூறிவரும் கருத்துக்கள் முற்றிலும் பொய் என்பது இதன் மூலம்…

34 0 0