சாம்பியன்ஸ் லீக் காலிறுதிக்குப் லிவர்பூல் மற்றும் அட்லாட்டிகோ மாட்ரிட் தகுதி.!
ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் காலிறுதிச் சுற்றுக்கு லிவர்பூல் மற்றும் அட்லாட்டிகோ மாட்ரிட் அணிகள் தகுதி பெற்றுள்ளன. அன்பீல்டு மைதானத்தில் நடைபெற்ற 16-ஆவது சுற்றின் இரண்டாவது ஆட்டத்தில், லிவர்பூல் கலாட்டா சாரே அணியை 4-0 என்ற கோல் கணக்கில் வென்றது. லிவர்பூலுக்கு டோமினிக் சோபோஸ்லாய், ஹுகோ எகிடிகே, ரியான் கிராவன்பெர்ச், முகமது சாலா ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர்.
இதன் மூலம் இரு ஆட்டங்களின் மொத்தத்தில் 4-1 என்ற கணக்கில் லிவர்பூல் அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.
மற்றொரு பரபரப்பான ஆட்டத்தில் அட்லாட்டிகோ மாட்ரிட் அணியும் டோட்டன்ஹாம் அணியை மொத்த கோல் கணக்கில் 7-5 என்ற இடைவெளியில் வீழ்த்தி காலிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளது.