உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
7 புதன்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

இரு நிறுவனங்களின் சுயநலப் போக்கினால் கேபிள் TV உரிமையாளர்களும், மக்களும் பாதிப்பு.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
74 பார்வைகள்

இரு நிறுவனங்களின் சுயநலப் போக்கினால் தமது தொழில் நடவடிக்கைகள் முற்றாகப் பறிக்கப்படுவதாக குற்றம் சாட்டியுள்ள “கேபிள்” தொலைக்காட்சி சேவையை முன்னெடுக்கும் உரிமையாளர்கள் தமக்கான நீதியை தாமதமின்றி கொடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இவ்வாறு கூறிய அகில இலங்கை கேபிள் TV ஒப்பிரேற்றர் சங்க பிரதிநிதிகள் மேலும் கூறுகையில்,

சுமார் இரு தசாப்தங்களுக்கு மேலாக இலங்கையின் பல பாகங்களிலும் குறித்த சேவையை ” கேபிள் TV லிங் ஒப்பரேற்றர்கள் என்ற நிலையில் இருந்து முன்னெடுத்து வருகின்றோம்.

குறிப்பாக யாழ்ப்பாணத்தில் 110 லிங் ஒப்பரேற்றர்களும், மலையகத்தில் 54 லிங் ஒப்பரேற்றர்களும் உள்ளடங்கலாக 300 இற்கும் அதிகமானவர்கள் இந்த சேவையை முன்னெடுத்து வருகின்றனர்.

ஆனால் இலங்கையில் இரு நிறுவனங்கள் தவிர்ந்த ஏனையவர்களுக்கு அதற்கான உரிமங்கள் வழங்கப்படவில்லை.

ஆனால் நாம் தேசிய தொலைத்தொடர்பு ஆணைக்குழுவிடம் எமது விண்ணப்பங்களை கொடுத்தும் அதற்கான தீர்வு கிடைக்கவில்லை.

குறிப்பாக 70 இலட்சத்து 80 ஆயிரம் ரூபா பணத்தை அனுமதிக்காக பெற்றுக்கொண்ட தொலைத்தொடர்பு ஆணைக்குழு அனுமதிக்கான நடவடிக்கைகளை எடுத்திருந்தும் குறித்த இரு நிறுவனங்களின் அழுத்தங்களால் தடுக்கப்பட்டுள்ளது.

நாம் இந்த சேவையை முன்னெடுக்க பல கோடிகளை முதலீடு செய்துள்ள நிலையில் தற்போது தொழிலும் இல்லை முதலும் இல்லை என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.

எனவே குறித்த இரு நிறுவனங்களின் பிடியில் சிக்குண்டுள்ள எமது சேவையை மீட்டு எமக்கான நீதியை பெற்றுத்தர உரிய தப்பினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மட்டக்களப்பில் சுவர் இடிந்து விழுந்ததில் குடும்பஸ்தர் உயி@ரிழப்பு!

மட்டக்களப்பு, சந்திவெளிப் பகுதியில் வீடு ஒன்றின் கட்டுமானப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது கட்டடச் சுவர் ஒன்று இடிந்து விழுந்ததில் இரண்டு பிள்ளைகளின் தந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.…

81 0 0
இலங்கை செய்திகள்

மன்னாரில் சிறப்பாக இடம்பெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான தடகள விளையாட்டுப் போட்டி

மன்னார் மாற்றுத்திறனாளிகளுக்கான மாவட்ட தடகள விளையாட்டுப் போட்டி இன்று செவ்வாய்க்கிழமை (06) மாலை மன்னார் மாவட்ட பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது. சமூக சேவைகள் திணைக்களமும் மன்னார்…

53 0 0
இலங்கை செய்திகள்

சிறீதரனின் உரையை ஹன்சாட்டில் இருந்து நீக்குமாறு அர்ச்சுனா வலியுறுத்தல்

பநாடாளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அந்நியச் செலாவணிச் சட்டத்தின் கீழான ஒழுங்கு விதிகள் மீதான விவாதத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம்…

71 0 0
இலங்கை செய்திகள்

சர்வதேச ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, ஒலுவில் அல்-ஹம்றா மகா வித்தியாலயத்தில் பல்வேறு விசேட நிகழ்வுகள்

சர்வதேச ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, ஒலுவில் அல்-ஹம்றா மகா வித்தியாலயத்தில் பல்வேறு விசேட நிகழ்வுகள் இன்று புதன்கிழமை (06) பாடசாலையில் இடம்பெற்றது. அதிபர் ஏ.எல்.அப்துல் ஜப்பார் தலைமையில்…

67 0 0