இலங்கை அணி முதல் உலகக் கிண்ணத்தை வென்று இன்றுடன் 30 ஆண்டுகள்.!
இன்று (17 மார்ச், 2026) அர்ஜுன் ரணதுங்க தலைமையிலான இலங்கை கிரிக்கெட் அணி, தமது முதல் உலகக் கிண்ண வெற்றி சாதனையை பதிவு செய்த 30வது ஆண்டு நிறைவு கொண்டுள்ளது.1996 ஆம் ஆண்டு மார்ச் 17 அன்று பாகிஸ்தானின் லாகூர் கடாபி மைதானத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில், இலங்கை அணி பலம் வாய்ந்த ஆவுஸ்திரேலியாவை வீழ்த்தி முதன்முறையாக உலகக் கிண்ணத்தை வென்றது.
அப்போதிருந்து இலங்கை கிரிக்கெட் வரலாற்றில் புதிய சகாப்தம் தொடங்கியது.அந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்த அவுஸ்திரேலியா 7 விக்கெட்டுகளை இழந்து 241 ஓட்டங்களை குவித்தது. இலங்கை அணி 242 ஓட்டங்களை எட்டியதும், 7 விக்கெட்டுகளின் வித்தியாசத்தில் வரலாற்று வெற்றியை பதிவு செய்தது.
இந்த சாதனை, சிறிய தீவு நாடான இலங்கையை உலக கிரிக்கெட் அரங்கில் வல்லரசாக நிலைநிறுத்திய முக்கிய தருணமாகும். இன்று அந்த வெற்றி ஒவ்வொரு இலங்கை கிரிக்கெட் ரசிகனின் மனதில் இன்னும் நிறைந்துள்ள பெருமைக்குரிய நினைவாக உள்ளது.