அச்சுறுத்தலையும் மீறி உலகக் கோப்பையில் ஈரான் அணி பங்கேற்பு திட்டம்.!
அமெரிக்க ஜனாதிபதியின் எச்சரிக்கைகளைப் பொருட்படுத்தாமல், வரவிருக்கும் உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளில் ஈரான் ஆண்கள் அணி பங்கேற்கத் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இந்தாண்டு உலகக் கோப்பை போட்டிகள் அமெரிக்கா, கனடா மற்றும் மெக்ஸிகோ நாடுகளில் இணைந்து ஜூன் 11 முதல் ஜூலை 19 வரை நடைபெறவுள்ளன.
அமெரிக்கா, இஸ்ரேல் – ஈரான் இடையிலான பதற்றம் உச்சமடைந்துள்ள நிலையில், ஈரான் அணி போட்டிகளில் பங்கேற்பது குறித்து சந்தேகங்கள் எழுந்துள்ளன.இதனிடையே, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது சமூக வலைதளப் பதிவில், “ஈரான் அணி வரவேற்கப்படுகின்றது.
ஆனால் அவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டால், இந்நேரத்தில் அவர்கள் வருவது சரியானதா என்பது கேள்விக்குறியாகும்” எனதெரிவித்துள்ளார்.இந்நிலையில், ஆசிய கால்பந்து கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் விண்ட்சர் பால் ஜான், ஈரான் அணி உலகக் கோப்பையில் பங்கேற்கும் நிலைப்பாட்டில் மாற்றமில்லை என்றும், இதுவரை விலகுவதாக எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
உலக அரங்கில் சிறந்த அணிகளில் ஒன்றாகக் கருதப்படும் ஈரான் அணி, தங்களது உள்நாட்டு பிரச்சினைகளை சமாளித்து போட்டியில் பங்கேற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.