உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

ஐபிஎல் 2026: சின்னசாமி மைதானத்தில் போட்டிகளுக்கு அனுமதி.!

44 பார்வைகள்

பெங்களூரில் உள்ள எம். சின்னசாமி மைதானத்தில் ஐபிஎல் 2026 போட்டிகளை நடத்துவதற்கு கர்நாடக அரசு அதிகாரப்பூர்வ அனுமதி வழங்கியுள்ளது.நடப்பு சாம்பியனான ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதும் தொடக்கப்போட்டி வரும் மார்ச் 28ஆம் திகதி இம்மைதானத்தில் நடைபெற உள்ளது.


ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் சொந்த மைதானமாக இருப்பதால், இத்தொடரின் ஒரு பிளே-ஓப் போட்டியும் இறுதிப்போட்டியும் இங்கே நடைபெறும் என உறுதி செய்யப்பட்டுள்ளது.கடந்த ஆண்டு ஏற்பட்ட நெரிசல் சம்பவத்தைத் தொடர்ந்து, பாதுகாப்பை பலப்படுத்த கர்நாடக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

இதற்காக அமைக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் மைதானத்தில் மாற்றங்கள்மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இரசிகர்கள் சிரமமின்றி நுழைய கூடுதலாக 6 புதிய நுழைவு வாயில்கள் அமைக்கப்பட்டதுடன், ஏற்கனவே இருந்த வாயில்களும் விரிவுபடுத்தப்பட்டுள்ளன.


இத்தொடரில் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தமது 7 சொந்த மைதானப் போட்டிகளில் 5 போட்டிகளை சின்னசாமி மைதானத்தில், மீதமுள்ள 2 போட்டிகளை ராய்ப்பூரில் விளையாட உள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

விளையாட்டுச் செய்திகள்

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவிற்கு முதலாவது தங்கப் பதக்கம்

ஜப்பானின் நிஷினில் உள்ள கோரோகி விளையாட்டுப் பூங்காவில் இன்று (22) நடைபெற்ற இறுதிப் போட்டியில் இலங்கை அணியை 147 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, ஆசிய விளையாட்டுப் போட்டிகளில்…

39 0 0
விளையாட்டுச் செய்திகள்

தனது இறுதி சர்வதேச போட்டிக்கான சிறப்பு ஜெர்சியை அறிமுகப்படுத்தினார் மெஸ்ஸி

அர்ஜென்டினா அணிக்காக தனது கடைசி சர்வதேசப் போட்டியில் விளையாடவுள்ள கால்பந்து நட்சத்திரம் லியோனல் மெஸ்ஸி, அதற்காக வடிவமைக்கப்பட்டுள்ள சிறப்பு ஜெர்சியை அறிமுகப்படுத்தியுள்ளார். அர்ஜென்டினா மற்றும் பெனின் அணிகளுக்கு…

19 0 0
விளையாட்டுச் செய்திகள்

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி : இலங்கையை வீழ்த்தியது இங்கிலாந்து

இலங்கை அணிக்கு எதிராக செஸ்டர்-லீ-ஸ்ட்ரீட்டில் நடைபெற்ற முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 89 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 266 ஓட்டங்கள்…

18 0 0
விளையாட்டுச் செய்திகள்

சென்னை சுப்பர் கிங்ஸ் அணியில் ஸஹீர் கானுக்கு புதிய பொறுப்பு!

2027 ஆம் ஆண்டு இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்) தொடருக்கு முன்னதாக, சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் புதிய தலைமை பயிற்றுவிப்பாளர் முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர்…

36 0 0