உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

எதிர்வரும் 2027 ஒருநாள் உலகக் கோப்பை – இந்தியா வெல்வதே இலக்கு: ஷுப்மன் கில் தெரிவிப்பு.!

43 பார்வைகள்

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ஷுப்மன் கில் எதிர்வரும் 2027 ஒருநாள் உலகக் கோப்பையை வெல்வதே இந்தியாவின் பிரதான இலக்கு என தெரிவித்துள்ளார். தற்போது இந்திய அணியை ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் வழிநடத்தி வருகிறார்.
“தேசத்துக்காக உலகக் கோப்பை வெல்வதே பிரதான இலக்கு. கடந்த முறை இறுதிப்போட்டிக்குச் சென்றோம்; அடுத்த முறை நிச்சயமாக அதனை தகர்த்து வெல்வோம். தென் ஆப்பிரிக்காவில் நடைபெறும் அடுத்த உலகக் கோப்பை தொடரில் சிறந்த வாய்ப்பு உள்ளது” என ஷுப்மன் கில் கூறியுள்ளார்.


2027 உலகக் கோப்பை தொடர் தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே மற்றும் நமீபியாவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது அக்டோபர் முதல் நவம்பர் வரை நடைபெறும். கடந்த 2023 உலகக் கோப்பை தொடரில் இந்தியா இறுதிப் போட்டியில் தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.

அதை தொடர்ந்து, 2024 மற்றும் 2026-ல் இந்தியா டி20 உலகக் கோப்பை வென்றது, 2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியிலும் இந்தியா சாம்பியன் ஆனது.இதனால், ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி 2027 உலகக் கோப்பையை வென்றால், ஒரே நேரத்தில் டி20 உலகக் கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி மற்றும் உலகக் கோப்பை என மூன்று ஐசிசி கோப்பைகளை தன்வசம் வைத்திருக்கும் அணியாக புதிய சாதனை படைத்திருப்பார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

விளையாட்டுச் செய்திகள்

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவிற்கு முதலாவது தங்கப் பதக்கம்

ஜப்பானின் நிஷினில் உள்ள கோரோகி விளையாட்டுப் பூங்காவில் இன்று (22) நடைபெற்ற இறுதிப் போட்டியில் இலங்கை அணியை 147 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, ஆசிய விளையாட்டுப் போட்டிகளில்…

40 0 0
விளையாட்டுச் செய்திகள்

தனது இறுதி சர்வதேச போட்டிக்கான சிறப்பு ஜெர்சியை அறிமுகப்படுத்தினார் மெஸ்ஸி

அர்ஜென்டினா அணிக்காக தனது கடைசி சர்வதேசப் போட்டியில் விளையாடவுள்ள கால்பந்து நட்சத்திரம் லியோனல் மெஸ்ஸி, அதற்காக வடிவமைக்கப்பட்டுள்ள சிறப்பு ஜெர்சியை அறிமுகப்படுத்தியுள்ளார். அர்ஜென்டினா மற்றும் பெனின் அணிகளுக்கு…

20 0 0
விளையாட்டுச் செய்திகள்

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி : இலங்கையை வீழ்த்தியது இங்கிலாந்து

இலங்கை அணிக்கு எதிராக செஸ்டர்-லீ-ஸ்ட்ரீட்டில் நடைபெற்ற முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 89 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 266 ஓட்டங்கள்…

19 0 0
விளையாட்டுச் செய்திகள்

சென்னை சுப்பர் கிங்ஸ் அணியில் ஸஹீர் கானுக்கு புதிய பொறுப்பு!

2027 ஆம் ஆண்டு இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்) தொடருக்கு முன்னதாக, சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் புதிய தலைமை பயிற்றுவிப்பாளர் முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர்…

37 0 0