மத்திய கிழக்கு மோதல் காரணமாக ஆப்கானிஸ்தான் – இலங்கை கிரிக்கெட் தொடர் ஒத்திவைப்பு.!
மத்திய கிழக்கில் தொடர்ந்து நடைபெறும் மோதல்களினால், ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான திட்டமிடப்பட்ட கிரிக்கெட் தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.இரு அணிகளும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடக்கவிருந்த போட்டிகளில் மோதத் திட்டமிடப்பட்டிருந்தன.
ஆனால் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான நிலைமைகள் காரணமாக இந்த தொடர் விரைவில் நடைபெற முடியாததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
2026 மார்ச் 13 முதல் 25 வரை நடைபெறவிருந்த இந்த தொடரில், ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் மோதவிருந்தனர்.