உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

மேத்யூ ஹைடன் குஜராத் டைட்டன்ஸ் துடுப்பாட்ட பயிற்சியாளராக நியமனம்.!

40 பார்வைகள்

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரான மேத்யூ ஹைடன், 2026-ம் ஆண்டு ஐபிஎல் சீசனையொட்டி குஜராத் டைட்டன்ஸ் அணியின் துடுப்பாட்ட பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.2 முறை ஒருநாள் போட்டி உலகக் கோப்பையை வென்றவரும், தனது காலத்தில் ஆதிக்கம் செலுத்திய தொடக்க ஆட்டக்காரர்களில் ஒருவருமான மேத்யூ ஹைடன், தனது புகழ்பெற்ற சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை அனுபவத்தையும், நவீனகால டி20 துடுப்பாட்ட நுணுக்கங்களில் உள்ள தனது திறமையையும் கொண்டு குஜராத் டைட்டன்ஸ் அணியின் பயிற்சியாளர் குழுவில் இணைந்துள்ளார்.


ஆஸ்திரேலிய அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் அனைத்து வடிவிலும் 273 ஆட்டங்களில் விளையாடி உள்ள ஹைடன் 15 ஆயிரத்துக்கும் அதிகமான ரன்களை குவித்துள்ளார். அவர் பல்வேறு ஐசிசி தொடர்களில் ஆஸ்திரேலிய அணியின் வெற்றிகளில் முக்கிய பங்கு வகித்துள்ளார்.குஜராத் டைட்டன்ஸ் அணியின் இயக்குநர் விக்ரம் சோலங்கி கூறும்போது,


“மேத்யூ ஹைடனின் நியமனம் எங்களது பயணத்தின் ஒரு முக்கியமான கட்டத்தில் அமைந்துள்ளது. சர்வதேச கிரிக்கெட்டின் மிக உயர்ந்த மட்டத்தில் அவருக்கு இருக்கும் அனுபவம் மற்றும் வளர்ந்து வரும் இளம் வீரர்களுக்கு வழிகாட்டும் அவரது திறன், வரும் காலங்களில் எங்களது அணியின் துடுப்பாட்ட அடையாளத்தை வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகிக்கும்” என்றார்.
மேத்யூ ஹைடன் கூறும்போது,


“நல்ல துடுப்பாட்டம் எதிரணிக்கு அழுத்தத்தை கொடுக்கும். ஆனால் சிறந்த துடுப்பாட்டம் ஆட்டத்தையே தன்வசப்படுத்தும். அந்தத் தரத்தை நாங்கள் குஜராத் டைட்டன்ஸ் அணியில் நிலைநாட்ட விரும்புகிறோம்” என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

விளையாட்டுச் செய்திகள்

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவிற்கு முதலாவது தங்கப் பதக்கம்

ஜப்பானின் நிஷினில் உள்ள கோரோகி விளையாட்டுப் பூங்காவில் இன்று (22) நடைபெற்ற இறுதிப் போட்டியில் இலங்கை அணியை 147 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, ஆசிய விளையாட்டுப் போட்டிகளில்…

39 0 0
விளையாட்டுச் செய்திகள்

தனது இறுதி சர்வதேச போட்டிக்கான சிறப்பு ஜெர்சியை அறிமுகப்படுத்தினார் மெஸ்ஸி

அர்ஜென்டினா அணிக்காக தனது கடைசி சர்வதேசப் போட்டியில் விளையாடவுள்ள கால்பந்து நட்சத்திரம் லியோனல் மெஸ்ஸி, அதற்காக வடிவமைக்கப்பட்டுள்ள சிறப்பு ஜெர்சியை அறிமுகப்படுத்தியுள்ளார். அர்ஜென்டினா மற்றும் பெனின் அணிகளுக்கு…

19 0 0
விளையாட்டுச் செய்திகள்

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி : இலங்கையை வீழ்த்தியது இங்கிலாந்து

இலங்கை அணிக்கு எதிராக செஸ்டர்-லீ-ஸ்ட்ரீட்டில் நடைபெற்ற முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 89 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 266 ஓட்டங்கள்…

18 0 0
விளையாட்டுச் செய்திகள்

சென்னை சுப்பர் கிங்ஸ் அணியில் ஸஹீர் கானுக்கு புதிய பொறுப்பு!

2027 ஆம் ஆண்டு இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்) தொடருக்கு முன்னதாக, சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் புதிய தலைமை பயிற்றுவிப்பாளர் முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர்…

36 0 0