உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
7 புதன்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

அல்லைப்பிட்டியில் பொலிஸாரால் சுட்டுக் கொ*ல்லப்பட்ட சிறுவனுக்கு நீதி வேண்டி போராட்டம்.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
56 பார்வைகள்

கடந்த பெப்ரவரி மாதம் அல்லைப்பிட்டி பகுதியில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்குப் பலியான அ.அருள்பாயஸ் என்ற சிறுவனின் கொலைக்கு நீதி வேண்டி இன்று (10) ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையம் முன்பாக போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

மனித உரிமை ஆர்வலர் அமைப்பினரால் முன்னெடுக்கப்பட்ட குறித்த போராட்டத்தில் சிறுவனின் உறவினர்கள் மற்றும் ஏனையோர் கலந்துகொண்டு, பதாகைகள் தாங்கியவாறு பொலிஸாருக்கு எதிராக கோசங்கள் எழுப்பியதுடன் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

குறித்த போராட்டம் ஊர்காவற்றுறை நீதிமன்றின் முன்பாக காலை 11 மணக்கு ஆரம்பமானது.

போராட்டம் ஆரம்பமான சில நிமிடங்களில் நீதிமன்ற பொலிஸாரால் நீதிமன்றுக்கு முன்பாக போராட்டம் நடத்த முடியாது எனக் கூறி நீதிமன்ற வளாகத்தை கடந்து போராட்டத்தை முன்னெடுக்குமாறு வலியுறுத்தப்பட்டது.

பொலிஸாரின் கோரிக்கையை ஏற்ற போராட்டக்காரர்கள் பின்பு ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையம் முன்பாக ஒன்றுகூடி போராட்டத்தை முன்னெடுத்தனர்.

இதன்போது பொலிஸாரின் செயலைக் கண்டித்து பல்வேறு சுலோங்கள் எழுதப்பட்ட பதாகைகளை தாங்கி, கோசமிட்டு தமது எதிர்ப்பை காட்டிய போராட்டக்காரர்கள் குறித்த கொலைக்கு காரணமான பொலிஸாரை தண்டிக்க வேண்டும் என்றும் குறிப்பாக தனது மகனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியே சுட்டதாகவும் தாயார் குற்றம் சாட்டினர்.

அத்துடன் மிலேச்சத்தனமான கொலைகளை பொலிஸார் இனியொரு தடவை மேற்கொள்ளக் கூடாது என்று வலியுறுத்தியதுடன் நியாயமான தீர்வு வழங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

முன்பதாக கடந்த 10 ஆம் திகதி அதிகாலை 1.15 மணியளவில் வேலணை – அல்லைபிட்டிப் பகுதியில் உத்தரவை மீறி கடமையில் இருந்த பொலிஸாரை மோதிவிட்டு தப்பிச்செல்ல முற்றட்ட ஹயஸ் ரக வாகனம் மீதே தாம் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் அதன் போதே குறித்த 17 வயது இளைஞன் உயிரிழந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மட்டக்களப்பில் சுவர் இடிந்து விழுந்ததில் குடும்பஸ்தர் உயி@ரிழப்பு!

மட்டக்களப்பு, சந்திவெளிப் பகுதியில் வீடு ஒன்றின் கட்டுமானப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது கட்டடச் சுவர் ஒன்று இடிந்து விழுந்ததில் இரண்டு பிள்ளைகளின் தந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.…

82 0 0
இலங்கை செய்திகள்

மன்னாரில் சிறப்பாக இடம்பெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான தடகள விளையாட்டுப் போட்டி

மன்னார் மாற்றுத்திறனாளிகளுக்கான மாவட்ட தடகள விளையாட்டுப் போட்டி இன்று செவ்வாய்க்கிழமை (06) மாலை மன்னார் மாவட்ட பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது. சமூக சேவைகள் திணைக்களமும் மன்னார்…

53 0 0
இலங்கை செய்திகள்

சிறீதரனின் உரையை ஹன்சாட்டில் இருந்து நீக்குமாறு அர்ச்சுனா வலியுறுத்தல்

பநாடாளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அந்நியச் செலாவணிச் சட்டத்தின் கீழான ஒழுங்கு விதிகள் மீதான விவாதத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம்…

71 0 0
இலங்கை செய்திகள்

சர்வதேச ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, ஒலுவில் அல்-ஹம்றா மகா வித்தியாலயத்தில் பல்வேறு விசேட நிகழ்வுகள்

சர்வதேச ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, ஒலுவில் அல்-ஹம்றா மகா வித்தியாலயத்தில் பல்வேறு விசேட நிகழ்வுகள் இன்று புதன்கிழமை (06) பாடசாலையில் இடம்பெற்றது. அதிபர் ஏ.எல்.அப்துல் ஜப்பார் தலைமையில்…

67 0 0