இலங்கை மின்சார சபையின் தொழிற்சங்கங்கள் பணிப்புறக்கணிப்பு.!
இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்பு நடவடிக்கைகளை எதிர்த்து சுமார் 25 தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து இன்று பிற்பகல் 3 மணி முதல் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளன. மின்சார சபையை புதிய நிறுவனங்களாக மாற்றும் நடவடிக்கையின் போது ஊழியர்களுக்கு முறையான நியமனக் கடிதங்கள் வழங்கப்படாததே இந்தப் போராட்டத்திற்கான முக்கிய காரணமாக தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.
2024 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க இலங்கை மின்சாரச் சட்டத்தின் 18 (ஈ) பிரிவின் கீழ், ஊழியர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் வகையில் முறையான கூட்டு ஒப்பந்தம் ஒன்றில் கையொப்பமிடப்பட வேண்டும் என தொழிற்சங்கங்கள் வலியுறுத்துகின்றன.
மேலும், இந்த மறுசீரமைப்பு நடவடிக்கைகளின் போது ஊழியர்கள் தற்போது அனுபவித்து வரும் சம்பளமும், பிற சலுகைகளும் எந்த விதத்திலும் பாதிக்கப்படக்கூடாது என்றும், அவை தொடர்பான சட்ட ரீதியான உறுதிப்பாடுகள் வழங்கப்பட வேண்டும்என்றும் தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.