உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
26 புதன்

தொடர் சங்கிலிப் பறிப்பில் ஈடுபட்ட கொள்ளையன் வசமாகச் சிக்கினார்.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
28 பார்வைகள்

புத்தளம், வென்னப்புவ மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் வீதியில் செல்லும் பெண்களை இலக்கு வைத்துத் தங்கச் சங்கிலிகளை கொள்ளையிட்டு வந்த நபர் ஒருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை பொதுமக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

வென்னப்புவ – வைக்காலை, அங்கம்பிட்டிய பிரதேசத்தில் வைத்தே இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

நேற்று மாலை, வைக்காலை பகுதியில் வீதியில் பயணித்துக் கொண்டிருந்த பெண்ணொருவரின் கழுத்திலிருந்த தங்கச் சங்கிலியைச் சந்தேகநபர் அறுத்துக் கொண்டு உந்துருளியில் தப்பியோட முயன்றுள்ளார். இதன்போது, பாதிக்கப்பட்ட பெண் எழுப்பிய அபயக் குரலையடுத்து, உடனடியாகச் செயற்பட்ட அப்பகுதி பொதுமக்கள் சந்தேகநபரைத் துரத்திச் சென்று பிடித்துள்ளனர்.

பிடிபட்ட நபர் வென்னப்புவ பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார். விசாரணைகளின் போது, அவர் களுத்துறை வடக்கு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மல்வத்தை வீதியைச் சேர்ந்த 29 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அத்துடன், கொள்ளைச் சம்பவங்களுக்கு அவர் பயன்படுத்திய உந்துருளியும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட நபர் நாட்டின் ஏனைய பகுதிகளிலும் இவ்வாறான கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளாரா? அல்லது இவருடன் வேறு எவருக்கும் தொடர்புள்ளதா? என்பது குறித்து வென்னப்புவ பொலிஸார் பல்வேறு கோணங்களில் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வீட்டு முற்றத்தில் இருந்து சக்திவாய்ந்த மோட்டார் குண்டு மீட்பு.!

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தாழங்குடா பிரதேசத்தில் நேற்று மதியம் (25) சக்தி வாய்ந்த குண்டு ஒன்று பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது. தாழங்குடா வேடர் குடியிருப்பு சமுர்த்தி வீதியில்…

55 0 0
இலங்கை செய்திகள்

மட்டக்களப்பில் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு கோரிக்கை!

மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது குடிநீர் பிரச்சினையை முகம்கொடுத்துவரும் நிலையில் உள்ளுராட்சிமன்றங்கள் ஊடாக சுமார் 9500 குடும்பங்களுக்கு குடிநீர் விநியோக பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் குடிநீரை பொதுமக்கள் கவனமாக பயன்படுத்துமாறும்…

70 0 0
இலங்கை செய்திகள்

‘நீதிக்கான நீள் பயணம்’ அனைத்துலக மாநாடு தொடர்பாக மன்னார் மறைமாவட்ட ஆயருடன் சந்திப்பு.

(மன்னார் நிருபர்) (25-08-2026) மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா தலைமையிலான குழுவினர் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (25) மன்னார்…

74 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்த அரசு உத்தேசம்!

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்துவதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற வாராந்த…

58 0 0