உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
26 புதன்

கொட்டகலை புனித பத்திமா ஆலயத்தில் நடைபெற்ற சிலுவைப்பாதை நிகழ்வு.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
21 பார்வைகள்

தவக்காலத்தின் மூன்றாம் வாரத்தினை முன்னிட்டு இயேசு கிறிஸ்துவின் பாடுகளை நினைவு கூரும் புனித சிலுவைப்பாதை நிகழ்வு கொட்டகலை புனித பத்திமா தேவாலயத்தில் ஆலய பங்குத்தந்தை அருட்பணி ஜேசுதாசன் அடிகளார் மற்றும் பங்கு மக்களின் ஏற்பாட்டில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை மிகவும் பக்திபூர்வமாக இடம்பெற்றது.

இந்நிகழ்வானது கொட்டகலை புனித பத்திமா தேவாலயத்திலிருந்து ஆரம்பித்து கொட்டகலை நகர் வழியாக இயேசு கிறிஸ்து தனது வாழ்வின் இறுதி நாட்களில், தண்டனை விதிக்கப்பட்டது முதல் சிலுவையில் உயிர் துறந்து, கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டது வரை, அவர் சந்தித்த துன்பங்களை நினைவு கூர்ந்து, 14 நிலைகளாக தியானித்து கொட்டகலை லொக்கில் அந்தோனியார் திருசொரூபம் வரை சென்று சிலுவைப்பாதை நிகழ்வு நிறைவடைந்தது.

அதனைத் தொடர்ந்து லொக்கில் அந்தோனியார் திருச்சொரூப முன்றலில் பங்குத்தந்தை மற்றும் உதவிப் பங்குத்தந்தை ரன்ஜித லக்ஷான் ஆகியோர் இணைந்து விசேட ஆராதனை பூஜை இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வுக்கு தலவாக்கலை, கொட்டகலை ஆலய பங்குகளிலிருந்து ஏராளமான மக்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

குற்றவாளிகள் கண்டறியப்பட்டால் உரிய தண்டனை பெற்றுக்கொடுக்கப்படும்.!

காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கான நீதியைத் தேடும் பயணமும், அக்குடும்பங்களின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான வாழ்வாதார உதவிகளை வழங்கும் செயற்பாடுகளும் சமாந்தரமாக முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும், நிவாரணம் வழங்குவதானது…

28 0 0
இலங்கை செய்திகள்

வீட்டு முற்றத்தில் இருந்து சக்திவாய்ந்த மோட்டார் குண்டு மீட்பு.!

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தாழங்குடா பிரதேசத்தில் நேற்று மதியம் (25) சக்தி வாய்ந்த குண்டு ஒன்று பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது. தாழங்குடா வேடர் குடியிருப்பு சமுர்த்தி வீதியில்…

58 0 0
இலங்கை செய்திகள்

மட்டக்களப்பில் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு கோரிக்கை!

மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது குடிநீர் பிரச்சினையை முகம்கொடுத்துவரும் நிலையில் உள்ளுராட்சிமன்றங்கள் ஊடாக சுமார் 9500 குடும்பங்களுக்கு குடிநீர் விநியோக பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் குடிநீரை பொதுமக்கள் கவனமாக பயன்படுத்துமாறும்…

70 0 0
இலங்கை செய்திகள்

‘நீதிக்கான நீள் பயணம்’ அனைத்துலக மாநாடு தொடர்பாக மன்னார் மறைமாவட்ட ஆயருடன் சந்திப்பு.

(மன்னார் நிருபர்) (25-08-2026) மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா தலைமையிலான குழுவினர் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (25) மன்னார்…

74 0 0