ரி20 உலகக் கிண்ணத்தை சுவீகரித்தது இந்திய அணி.!
2026 ஆம் ஆண்டுக்கான இருபது ஓவர் உலகக் கிண்ணத் தொடரின் இறுதிப்போட்டி நேற்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் நடைபெற்றது.இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற நியூசிலாந்து அணி முதலில் களத்தடுப்பைத் தேர்வு செய்தது. இதன்படி இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.
இந்திய அணிக்காக தொடக்க துடுப்பாளர்களாக களமிறங்கிய அபிஷேக் சர்மா மற்றும் சஞ்சு சாம்சன் இருவரும் அதிரடி ஆட்டம் வெளிப்படுத்தி அரைசதங்கள் அடித்து அணிக்காக ஓட்டங்களை வேகமாக குவித்தனர்.இதன் மூலம் முதல் இன்னிங்ஸ் முடிவில் இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 255 ஓட்டங்களைப் பெற்றது. இதையடுத்து நியூசிலாந்து அணிக்கு 256 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.பதிலுக்கு துடுப்பாட களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு தொடக்கம் முதலே சிக்கல்கள் ஏற்பட்டன.
10 ஓவர்கள் நிறைவில் அந்த அணி 5 விக்கெட்டுகளை இழந்தது. இதற்கிடையில் மேரிட்போன்வாய் அரைசதம் அடித்து போராடினார்.
இறுதியில் 20 ஓவர்கள் நிறைவில் நியூசிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 159 ஓட்டங்கள் மட்டுமே பெற்றது.
இதனால் இந்திய அணி வெற்றி பெற்று 2026 ஆம் ஆண்டுக்கான இருபது ஓவர் உலகக் கிண்ணத்தை கைப்பற்றியது.