உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

இந்தியா, நியூசிலாந்து அணிகள் நாளை பலப்பரீட்சை.!

73 பார்வைகள்

இருபதுக்கு இருபது உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி நாளை இடம்பெறவுள்ளது.ஹமதாபத்தில் இடம்பெறவுள்ள இந்த போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.ஐசிசி தொடரின் இறுதிப் போட்டியில் இவ்விரு அணிகளும் மோதுவது இது இரண்டாவது முறையாகும்.

அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தின் மைய ஆடுகளம், சிவப்பு மற்றும் கருப்பு மண் கலவையால் வடிவமைக்கப்பட்டுள்ளது.இது துடுப்பாட்ட வீரர்களுக்குச் சாதகமாக இருந்தாலும், வேகப்பந்து வீச்சாளர்களுக்கு நல்ல வேகம் மற்றும் பந்து எழும்புதலை வழங்கக்கூடியது.200 ஓட்டங்கள் என்பது இந்த மைதானத்தில் பாதுகாப்பான இலக்காக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஆடுகளம் புதிதாகத் தயார் செய்யப்பட்டுள்ளதுகடந்த பெப்ரவரி 9 ஆம் திகதிக்குப் பிறகு எந்தப் போட்டியும் இந்த ஆடுகளத்தில் நடத்தப்படவில்லை.இந்த மைதானத்தில் விளையாடிய அனுபவம் இரு அணிகளுக்கும் உண்டு.இரு அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன.

கடந்த 2025 செம்பியன்ஸ் கிண்ண இறுதிப் போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா கிண்ணத்தை வென்றிருந்தது.அந்தப் பெருமையைத் தக்கவைக்க இந்தியா முனைப்பு காட்டும் நிலையில், உலகக் கிண்ணத்தை வென்று பதிலடி கொடுக்க நியூசிலாந்து முயற்சிகளை மேற்கொள்ளும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

விளையாட்டுச் செய்திகள்

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவிற்கு முதலாவது தங்கப் பதக்கம்

ஜப்பானின் நிஷினில் உள்ள கோரோகி விளையாட்டுப் பூங்காவில் இன்று (22) நடைபெற்ற இறுதிப் போட்டியில் இலங்கை அணியை 147 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, ஆசிய விளையாட்டுப் போட்டிகளில்…

39 0 0
விளையாட்டுச் செய்திகள்

தனது இறுதி சர்வதேச போட்டிக்கான சிறப்பு ஜெர்சியை அறிமுகப்படுத்தினார் மெஸ்ஸி

அர்ஜென்டினா அணிக்காக தனது கடைசி சர்வதேசப் போட்டியில் விளையாடவுள்ள கால்பந்து நட்சத்திரம் லியோனல் மெஸ்ஸி, அதற்காக வடிவமைக்கப்பட்டுள்ள சிறப்பு ஜெர்சியை அறிமுகப்படுத்தியுள்ளார். அர்ஜென்டினா மற்றும் பெனின் அணிகளுக்கு…

19 0 0
விளையாட்டுச் செய்திகள்

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி : இலங்கையை வீழ்த்தியது இங்கிலாந்து

இலங்கை அணிக்கு எதிராக செஸ்டர்-லீ-ஸ்ட்ரீட்டில் நடைபெற்ற முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 89 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 266 ஓட்டங்கள்…

18 0 0
விளையாட்டுச் செய்திகள்

சென்னை சுப்பர் கிங்ஸ் அணியில் ஸஹீர் கானுக்கு புதிய பொறுப்பு!

2027 ஆம் ஆண்டு இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்) தொடருக்கு முன்னதாக, சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் புதிய தலைமை பயிற்றுவிப்பாளர் முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர்…

36 0 0