உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

போக்குவரத்து விதி மீறலுக்காக தோனிக்கு அபராதம்!

46 பார்வைகள்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மகேந்திர சிங் தோனிக்கு, போக்குவரத்து விதிமீறலுக்காக ₹1,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.நகர போக்குவரத்து கண்காணிப்பு அமைப்பு அவரது வீட்டின் அருகே வேக வரம்பு மீறப்பட்டதை பதிவு செய்ததை அடுத்து, மோட்டார் வாகனச் சட்டத்தின் பிரிவு 183ன் கீழ் டிஜிட்டல் முறையில் இந்த அபராதம் விதிக்கப்பட்டது.
இது சிறிய குற்றமாக இருந்தாலும், முன்னாள் தேசிய அணித் தலைவர் தொடர்புடைய விடயம் என்பதால், சமூக ஊடகங்களில் இது விரைவாக கவனம் பெற்றுள்ளது.


இதேவேளை, ராஞ்சியில் உள்ள ஒரு குடியிருப்பு நிலத்தை தவறாக பயன்படுத்தியதாகக் கூறப்படும் விவகாரம் தொடர்பாக ஜார்க்கண்ட் மாநில வீட்டுவசதி வாரியம் தோனிக்கு அழைப்பாணை அனுப்பியுள்ளது. குடியிருப்பு நோக்கத்திற்காக மட்டும் ஒதுக்கப்பட்ட இந்த நிலம் வணிக பயன்பாட்டிற்கு பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகம்தெரிவித்துள்ளனர்.


இந்த நிலம் ராஞ்சியில் உள்ள ஹர்மு சாலையில் அமைந்துள்ளது. தோனி பின்னர் ரிங் ரோட்டில் உள்ள தனது தற்போதைய இல்லத்திற்கு குடிபெயர்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது.இதற்கிடையில், 2026 ஆம் ஆண்டுக்கான இந்திய பிரீமியர் லீக் போட்டிகள் நெருங்கி வருவதால், தோனி தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

விளையாட்டுச் செய்திகள்

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவிற்கு முதலாவது தங்கப் பதக்கம்

ஜப்பானின் நிஷினில் உள்ள கோரோகி விளையாட்டுப் பூங்காவில் இன்று (22) நடைபெற்ற இறுதிப் போட்டியில் இலங்கை அணியை 147 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, ஆசிய விளையாட்டுப் போட்டிகளில்…

39 0 0
விளையாட்டுச் செய்திகள்

தனது இறுதி சர்வதேச போட்டிக்கான சிறப்பு ஜெர்சியை அறிமுகப்படுத்தினார் மெஸ்ஸி

அர்ஜென்டினா அணிக்காக தனது கடைசி சர்வதேசப் போட்டியில் விளையாடவுள்ள கால்பந்து நட்சத்திரம் லியோனல் மெஸ்ஸி, அதற்காக வடிவமைக்கப்பட்டுள்ள சிறப்பு ஜெர்சியை அறிமுகப்படுத்தியுள்ளார். அர்ஜென்டினா மற்றும் பெனின் அணிகளுக்கு…

19 0 0
விளையாட்டுச் செய்திகள்

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி : இலங்கையை வீழ்த்தியது இங்கிலாந்து

இலங்கை அணிக்கு எதிராக செஸ்டர்-லீ-ஸ்ட்ரீட்டில் நடைபெற்ற முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 89 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 266 ஓட்டங்கள்…

18 0 0
விளையாட்டுச் செய்திகள்

சென்னை சுப்பர் கிங்ஸ் அணியில் ஸஹீர் கானுக்கு புதிய பொறுப்பு!

2027 ஆம் ஆண்டு இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்) தொடருக்கு முன்னதாக, சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் புதிய தலைமை பயிற்றுவிப்பாளர் முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர்…

36 0 0