உலக பீச் வலைப்பந்தாட்ட போட்டி புவனேஷ்வரில் இன்று தொடக்கம்.!
உலக பீச் வாலிபால் போட்டி ஒடிசா மாநிலத் தலைநகர் புவனேஷ்வரில் இன்று (மார்ச் 4) தொடங்கி வரும் 8-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த கேஐஐடி பல்கலைக்கழகம் இப்போட்டியை ஏற்பாடு செய்துள்ளது. ஆடவர் மற்றும் மகளிர் என இரு பிரிவுகளிலும் போட்டிகள் நடைபெறுகின்றன. மொத்தம் 52 நாடுகளைச் சேர்ந்த 82 அணிகள் பங்கேற்கின்றன.
போட்டிகள் லீக் மற்றும் நாக்-அவுட் முறையில் நடைபெறும். கேஐஐடி பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள டூட்டி சந்த் தடகள மைதானத்தில், சர்வதேச தரத்தில் அமைக்கப்பட்டுள்ள பீச் வாலிபால் அரங்கில் போட்டிகள் நடைபெறுகின்றன.
தொடக்க விழாவில் சர்வதேச வாலிபால் சம்மேளனத் தலைவர் பேபியோ அஸிவேடோ மற்றும் கேஐஐடி பல்கலைக்கழக வேந்தர் அச்சுதா சமந்தா உள்ளிட்டோர் கலந்துகொள்ளவுள்ளனர். அடுத்த மூன்று ஆண்டுகளும் இந்தப்போட்டி புவனேஷ்வரிலேயே நடைபெறும் என பேபியோ அஸிவேடோ தெரிவித்தார்.