உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

இளைஞனின் கோடரி தாக்குதலில் மூதாட்டி உயிரிழப்பு.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
37 பார்வைகள்

அண்டை வீட்டு உறவினரான இளைஞன் ஒருவரால் கோடரியால் தாக்கப்பட்டு, படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த 71 வயதுடைய மூதாட்டி ஒருவர், 16 நாட்களுக்குப் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என்று களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,
களுத்துறை தெற்கு, கிதுலாவ, லாகோஸ்வத்த ஜன உதான கிராமத்தைச் சேர்ந்த எச். பி. யசவதி (வயது 71) என்ற மூதாட்டியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கடந்த 11ஆம் திகதி இக் கொடூரமான தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

சந்தேகநபர் மூதாட்டியின் முகத்திலேயே கோடரியால் கடுமையாகத் தாக்கியுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தாக்குதலுக்குள்ளான மூதாட்டி தனது வீட்டின் வரவேற்பறையில் இரத்த வெள்ளத்தில் கிடப்பதை அவரது மருமகள் முதலில் கண்டுள்ளார். குற்றச்செயலுக்குப் பயன்படுத்தப்பட்ட கோடரியையும் பொலிஸார் அதே இடத்திலிருந்து கைப்பற்றியுள்ளனர்.

தாக்குதலுக்குள்ளான மூதாட்டி களுத்துறை நாகொட வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, 16 நாட்கள் உயிருக்குப் போராடி வந்த நிலையிலேயே நேற்று உயிரிழந்துள்ளார்.

தாக்குதலை நடத்தினார் எனக் கருதப்படும் உறவினரான இளைஞன், சம்பவம் இடம்பெற்ற அன்றைய தினமே பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

எனினும், இந்தத் தாக்குதலுக்கான துல்லியமான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை என்று பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்த அரசு உத்தேசம்!

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்துவதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற வாராந்த…

39 0 0
இலங்கை செய்திகள்

சுகீஷ்வர பண்டாரவின் பிணை மனு நிராகரிப்பு!

புதிய மக்கள் முன்னணியின் தலைவர் சுகீஷ்வர பண்டாரவின் பிணை கோரிக்கை நீதிமன்றத்தால் மீண்டும் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, சுகீஷ்வர பண்டாரவை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 9ஆம் திகதி வரை…

61 0 0
இலங்கை செய்திகள்

கரைத்துறைப்பற்று பிரதேச சொயலாளராக சுஜீவா சிவதாஸ் கடமைகளை பொறுப்பேற்றார்

கரைத்துறைப்பற்று பிரதேச சொயலாளராக சுஜீவா சிவதாஸ் கடமைகளை பொறுப்பேற்றார். முல்லைத்தீவு கரைத்துறைப்பற்று பிரதேச செயலகத்தின் புதிய பிரதேச செயலாளராக சுஜீவா சிவதாஸ் இன்று திங்கட்கிழமை தனது கடமைகளை…

58 0 0
இலங்கை செய்திகள்

நானாட்டான் பிரதேச சபைக்குட்பட்ட கிராமங்களில் வளர்ப்பு நாய்களுக்கான இலவச மருத்துவ முகாம்

மன்னார் கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்தின் ஊடாக நானாட்டான் பிரதேச சபையினால் வளர்ப்பு நாய்களுக்கான இலவச கருத்தடை சிகிச்சை திட்டம் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (25) நானாட்டான்…

39 0 0