உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

கடலில் மூழ்கி மாணவன் மாயம்.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
33 பார்வைகள்

களுத்துறை, கட்டுக்குருந்த கடற்பரப்பில் நீராடச் சென்ற 17 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவர் இராட்சத அலையில் சிக்கி இழுத்துச் செல்லப்பட்டு மாயமாகியுள்ளார் என்று களுத்துறை தெற்கு தலைமையகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,
மொரட்டுவை புனித செபஸ்தியான் கல்லூரியின் உயர்தரத்தில் கணிதப் பிரிவில் பயின்று வரும், களுத்துறை நாகொடை பகுதியைச் சேர்ந்த லினாஷ் தேவமிக (வயது 17) என்ற மாணவனே இவ்வாறு மாயமாகியுள்ளார்.

மேற்படி மாணவன் நேற்று மாலை தனது நண்பர்கள் மூவருடன் இணைந்து பொழுதுபோக்குக்காக கட்டுக்குருந்த கடற்கரையில் நீராடிக்கொண்டிருந்த போதே இந்த விபரீதம் நிகழ்ந்துள்ளது.

நண்பர்களுடன் நீராடிக்கொண்டிருந்த போது, திடீரென உருவான பலத்த இராட்சத அலையில் சிக்கிய மாணவன், நண்பர்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டுள்ளார். இதன்போது நண்பர்கள் கூச்சலிட்டதை அடுத்து அங்கிருந்தவர்கள் உதவ முற்பட்டும், மாணவன் கடலில் அடித்துச் செல்லப்பட்டார்.

மாணவன் மாயமானதையடுத்து, பிரதேச மக்களும் மீனவர்களும் இணைந்து கடலில் தீவிர தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இது தொடர்பில் களுத்துறை தெற்கு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், கடற்படையினரின் உதவியுடன் தேடுதல் பணிகளை விரிவுபடுத்தியுள்ளனர்.

இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்த அரசு உத்தேசம்!

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்துவதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற வாராந்த…

39 0 0
இலங்கை செய்திகள்

சுகீஷ்வர பண்டாரவின் பிணை மனு நிராகரிப்பு!

புதிய மக்கள் முன்னணியின் தலைவர் சுகீஷ்வர பண்டாரவின் பிணை கோரிக்கை நீதிமன்றத்தால் மீண்டும் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, சுகீஷ்வர பண்டாரவை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 9ஆம் திகதி வரை…

61 0 0
இலங்கை செய்திகள்

கரைத்துறைப்பற்று பிரதேச சொயலாளராக சுஜீவா சிவதாஸ் கடமைகளை பொறுப்பேற்றார்

கரைத்துறைப்பற்று பிரதேச சொயலாளராக சுஜீவா சிவதாஸ் கடமைகளை பொறுப்பேற்றார். முல்லைத்தீவு கரைத்துறைப்பற்று பிரதேச செயலகத்தின் புதிய பிரதேச செயலாளராக சுஜீவா சிவதாஸ் இன்று திங்கட்கிழமை தனது கடமைகளை…

58 0 0
இலங்கை செய்திகள்

நானாட்டான் பிரதேச சபைக்குட்பட்ட கிராமங்களில் வளர்ப்பு நாய்களுக்கான இலவச மருத்துவ முகாம்

மன்னார் கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்தின் ஊடாக நானாட்டான் பிரதேச சபையினால் வளர்ப்பு நாய்களுக்கான இலவச கருத்தடை சிகிச்சை திட்டம் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (25) நானாட்டான்…

39 0 0