உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

கர்நாடகாவுக்கு சவால் விடுத்த ஜம்மு- காஷ்மீர் அணி.!

56 பார்வைகள்

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் கர்நாடக அணியும் ஜம்மு & காஷ்மீர் அணியும் கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் மோதுகின்றன. டாஸ் வென்று முதலில் துடுப்பாடிய ஜம்மு & காஷ்மீர் அணி முதல் நாள் ஆட்ட முடிவில் 87 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 284 ஓட்டங்கள் எடுத்திருந்தது.

தொடர்ந்து நடைபெற்ற இரண்டாம் நாள் ஆட்டத்தில் அந்த அணி 173.1 ஓவர்களில் 584 ஓட்டங்கள் குவித்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அணியின் சார்பில் ஷுபம் பண்டிர் 121 ஓட்டங்களும், அப்துல் சமத் 61 ஓட்டங்களும் பெற்றனர். கர்நாடகா அணி சார்பில் பிரசித் கிருஷ்ணா 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

பின்னர் பதிலடி துடுப்பாட்டத்தில் ஈடுபட்ட கர்நாடகா அணி இரண்டாம் நாள் முடிவில் 69 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 220 ஓட்டங்கள் எடுத்துள்ளது. மயங்க் அகர்வால் 130 ஓட்டங்களுடன் களத்தில் உள்ளார்.இதேவேளை, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் முதல் ஆட்டத்தில் தோல்வியடைந்த நிலையில் இன்று இரண்டாவது ஒருநாள் போட்டியில் களமிறங்குகிறது.

இந்தப் போட்டி ஹோபர்ட்டில் காலை நடைபெறுகிறது. மேலும், செக் குடியரசின் பிராக் நகரில் நடைபெறும் சர்வதேச செஸ் போட்டியில் உலக சாம்பியன் குகேஷ், அமெரிக்க வீரர் ஹான்ஸ் மோக் நீமனுடன் மோதிய ஆட்டம் 62 நகர்வுகளுக்குப் பிறகு சமநிலையுடன் முடிந்தது. நடப்பு சாம்பியன் அர்விந்த் சிதம்பரம் தனது முதல் சுற்றில் தோல்வி அடைந்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

விளையாட்டுச் செய்திகள்

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவிற்கு முதலாவது தங்கப் பதக்கம்

ஜப்பானின் நிஷினில் உள்ள கோரோகி விளையாட்டுப் பூங்காவில் இன்று (22) நடைபெற்ற இறுதிப் போட்டியில் இலங்கை அணியை 147 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, ஆசிய விளையாட்டுப் போட்டிகளில்…

39 0 0
விளையாட்டுச் செய்திகள்

தனது இறுதி சர்வதேச போட்டிக்கான சிறப்பு ஜெர்சியை அறிமுகப்படுத்தினார் மெஸ்ஸி

அர்ஜென்டினா அணிக்காக தனது கடைசி சர்வதேசப் போட்டியில் விளையாடவுள்ள கால்பந்து நட்சத்திரம் லியோனல் மெஸ்ஸி, அதற்காக வடிவமைக்கப்பட்டுள்ள சிறப்பு ஜெர்சியை அறிமுகப்படுத்தியுள்ளார். அர்ஜென்டினா மற்றும் பெனின் அணிகளுக்கு…

19 0 0
விளையாட்டுச் செய்திகள்

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி : இலங்கையை வீழ்த்தியது இங்கிலாந்து

இலங்கை அணிக்கு எதிராக செஸ்டர்-லீ-ஸ்ட்ரீட்டில் நடைபெற்ற முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 89 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 266 ஓட்டங்கள்…

18 0 0
விளையாட்டுச் செய்திகள்

சென்னை சுப்பர் கிங்ஸ் அணியில் ஸஹீர் கானுக்கு புதிய பொறுப்பு!

2027 ஆம் ஆண்டு இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்) தொடருக்கு முன்னதாக, சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் புதிய தலைமை பயிற்றுவிப்பாளர் முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர்…

36 0 0