சிம்பாப்வே அணியை 72 ஓட்டங்களால் வீழ்த்தி இந்தியா வெற்றி.!
இருபதுக்கு இருபது உலகக் கிண்ணத் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் இந்திய அணி, சிம்பாப்வே அணியை 72 ஓட்டங்களால் தோற்கடித்தது. சென்னையில் நடைபெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சிம்பாப்வே அணி முதலில் களத்தடுப்பைத் தேர்வு செய்தது.
முதலில் துடுப்பாடிய இந்திய அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 256 ஓட்டங்களைப் பெற்றது. இந்திய அணியின் சார்பில் அபிஷேக் சர்மா 55 ஓட்டங்களும், ஹர்திக் பாண்டியா 50 ஓட்டங்களும், திலக் வர்மா 16 பந்துகளில் 44 ஓட்டங்களும் குவித்தனர்.
257 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பாடிய சிம்பாப்வே அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 184 ஓட்டங்களை மட்டுமே பெற்று தோல்வியடைந்தது. சிம்பாப்வே அணியின் பிரைன் பெனட் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 59 பந்துகளில் 97 ஓட்டங்களைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.